இந்தியா தக்க சமையத்தில் பண ,உதவி (கடன்) எரிபொருட்கள் மருந்துப் பொருட்கள் என்று உதவி செய்துள்ளது .
ஆனால் இலங்கை மீண்டு வருவதாக சொன்னாய் பாரு!அதத்தாண்டா சகிக்க முடியல அண்டாபுளுகு மோடி......
இப்பதானே இலங்கை மூழ்கிகிவிடப்போவுது .ஆரம்பமே இப்பதானே வரப்போவுது நைனா !
மகிந்தர் -கோட்டா கம்பனி இலங்கையை கொண்டு மூழ்கடித்துள்ள நிலையை மீட்டடுக்க முடியாது !
தானாக உழைக்காமல் தாய் வீட்டில் அல்லது அத்தை வீட்டில் சும்மா உக்காந்து வயிறு முட்ட திண்டால் என்னாகும் !??
எத்தனை நாட்களுக்கு கடன்படுவதும் .சும்மா பணம் அச்சிடுவதும்?
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து அபிவிருத்தி அடையாமல் இலங்கை நிமிரவே முடியாது !.
இலங்கையில் உள்ளூர் உற்பத்தி என்பது என்ன ?அவைகள் எங்கு கிடைக்கும் ? என்ன வகையான உற்பத்திகளை ஊக்குவிக்கலாம் என்பதை அறிய முடியாத மோட்டு மொக்கு கூட்டம் இருக்கும் வரை உருப்படவே முடியாது!
வடகிழக்கில் இயற்கை வழங்கல் கொட்டிக் கிடக்கின்றது ! வடகிழக்கு ,மலையைக தமிழர்கள் கடின உழைப்பாளிகள்! சோனக கூட்டம் வியாபாரக் கூட்டம். சந்தைபடுத்தும் திறன் வியாபாரக் கூட்டத்துக்கு உள்ளது !உள்ளூர் மக்களும் தன்னிறைவு கண்டு வளைகுடா நாடுகளுக்கு நாளாந்தம் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளமிருக்கு !
ஆனால் இவைகள் பற்றி வடகிழக்கு அரசியல்வாதிகள் எவனாவது சிந்தித்ததுண்டா ??
மறுபுறம் வடகிழக்கை துவம்சம் செய்யணும் வடகிழக்கை முன்னேற விடக்கூடாது என்று JR ஜெயவர்தன தொட்டு இன்றைய கோட்டா வரையும் பழிவாங்கி வரும் நிலை !
வடகிழக்கில் வன இலாகா Forest மற்றும் Wildlife ஆகிய இரண்டு திணைக்களங்கள் அரசாங்க காணிகள் என்று state land பிடித்து வைத்துக் கொண்டு சும்மா வச்சிருக்கானுகள் !அதுவும் வர்த்தமானி அறிவித்தலுடன்!
அந்தக் காணிகளை மக்களுக்கு வருடாந்த குத்தகைக்கு / வாடகைக்கு கொடுத்து மிகக் குறுகிய காலங்களில் அறுவடை செய்யக் கூடிய பல திட்டங்களை செய்யலாம்! வருமானம் ஈட்டும் திட்டங்கள் மற்றும் ஏற்றுமதி திட்டங்கள் நிறைய இருக்கு !
இப்படியான திட்டங்களுக்கு world bank and Asian development bank ஆகியன பணத்துடன் எப்போதும் உதவக் காத்துக் கொண்டிருக்கின்றது ! இந்தியா கடனுதவி கொடுக்கும்! ,ஜப்பான் அமெரிக்கா ,பிரித்தானியா ,ஜேர்மன் ,பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பண உதவி தொட்டு சகல உதவிகளும் செய்ய எப்போதும் தயாராகவே உள்ளது !
இவைகள் குறித்து இந்த மொக்கு அரசு ஒரு நாளாவது ஒரு நாட்டுத் தூதுவருடன் பேசியதுண்டா>ஒரு நாட்டிடம் உதவி கேட்டதுண்டா ? இல்ல இது குறித்து ஒரு சிறிய சிந்தனையாவது கொண்டதுண்டா ?அது சரி பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும் !
சரி நரிமார்க் ரணில் கடந்த நல்லாட்சியில் தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள முயன்றாரே தவிர இந்த நாட்டு மக்களின் முன்னேற்றம் கருதி ஏதாவது செய்தாரா ? இல்லையே?
பெசில் செய்த அதேவேலை பணம் அச்சிடுவதை செய்ய ரணில் வேண்டுமா ?
பாவம் சிங்கள் மக்கள் ? ஆனாலும் ரொம்பவும் நல்ல மக்கள்தான் எப்படி அடித்தாலும் தங்கும் மக்கள்தான்!இப்போது வீட்டுக்கு ஒருவர் வெளிநாடு சென்று உழைத்து மஹிந்த + கோட்டா கடனை கட்டுங்கோ ...
M.M.Nilamdeen
No comments:
Post a Comment