கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் உள்ள பிரச்சினைகளைக் குறைப்பதற்கான மாற்றுத் தீர்வாகவும் நடவடிக்கைகளுக்காக இலங்கை வரும் விமானங்களில் எரிபொருள் நிரப்ப வரும் விமானங்கள் சென்னை, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்படும் என்று தெரிய வருகின்றது!
இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களுடம் இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் அபாயம் காணப்படுவதாக தெரிய வருகின்றது! எரிபொருள் நெருக்கடி இலங்கையை உலகத்திலிருந்து விலக்கி வைப்பதாக தெரிவித்து குறித்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அடுத்த மாதத்தில் அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சியடையும் அபாயத்தில் இருப்பதாக இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றம் அறிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் டானியா அபயசுந்தர இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி பொதுமக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது.
மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு போன்றவற்றினால் மக்கள் கடும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கருத்தின்படி மக்கள் மேலும் கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அரச சேவையில் தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான தடைகளை நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது,அதாவது அரச ஊழியர்கள் கூடிய சீக்கிரம் வெளிநாடு போக வேண்டும் .அரசுக்கு கரன்சி வரணும் .அதற்கான அனுமதியை சீக்கிரம் கொடுக்கணும்.இது தொடர்பான சுற்று நிரூபத்தினை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விரைவில் வெளியிடவுடள்ளது.
அத்தியாவசிய அரச ஊழியர்களை மாத்திரம் வேலைக்கு அழைக்கும் திட்டம் இன்று முதல் நாட்டில் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றுநிரூபத்தினை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது.
ஜப்பான், போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்களுக்கு பல வேலை வாய்ப்புகளை தேடி அரசு அலசல்!
ஆக குறைந்தது வீட்டுக்கு ஒருவர் வெளிநாடு போக வேண்டும்!நாட்டுக்கு பணம் வரணும்!மஹிந்த கம்பனி கடந்த 10+கோட்டா கம்பனி அனுபவித்து வந்த சொர்க்கபுரி மன்னர் குடும்ப வாழ்க்கை செலவு + கொள்ளை + ஊழல் போன்ற துண்டு விழும் தொகை மற்றும் பணவீக்கத்தை மீள் நிரப்ப ?மீளாய்வு செய்ய நாட்டு மக்கள் வெளிநாடு போகணும் .அங்கு போய் உழைத்து அனுப்பணும் !
ஆக இன்னும் ஆட்சியில் இவனுகள் இருக்கணும், மன்னர் வாழ்க்கை சுகபோகங்கள் அனுபவிக்கணும், ஊழல் செய்யணும், அரச ஊழியன் தொட்டு நாட்டு மக்கள் அனைவரும் வெளிநாடு போய் கஷ்டப்பட்டு பணம் அனுப்பணும் .
இந்த அநியாயக் கன்றாவி கறுமங்களை எப்போது சிங்களம் உணரும் புரியும் ? இன்னும் உணராத முட்டாள்களாக இந்த மக்கள் !
ஆனால் ஒன்று சிங்கள மக்கள் ரொம்ப நல்லவங்கதான்!.... .உணவு தேடி, எரிபொருட்கள் தேடி, எரிவாய்வு தேடி, வீதிக்கு வரவைத்த இவனுகளை இன்னும் வைத்துக் கொண்டு, இத்தனை கொடுமைகளயும் தங்கிக் கொண்டு நாளாந்தம் விலைவாசி அதிகரிப்பையும் தங்கிக் கொண்டு விட்டு வச்சிருக்கானுகள் பாருங்கோ !அங்கதாண்டா இவனுகளை இன்னும் மொட்டுக் கட்சி என்பதா மோட்டுக் கூட்டம் என்பதா ?
கடைசியாக அன்னை இந்திரா காந்தி நிலைமை வந்திடுமா ??
எம்.எம்.நிலாம்டீன் --

No comments:
Post a Comment