நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டுள்ளதானது பாரிய நெருக்கடிக்குள் இலங்கை - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, January 27, 2017

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டுள்ளதானது பாரிய நெருக்கடிக்குள் இலங்கை




நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளதாக செய்திஓன்றுவந்துள்ளது நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அல் சைட்    ஹூசெய்ன் ஏற்றுக் கொண்டுள்ளார்..                                                                                                             
அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் ஆரம்பமாக உள்ளன. இந்த அமர்வுகளில் பங்கேற்பதற்காக நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் நான்கு பேர் ஜெனீவா செல்ல உள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஓர் அரச சார்பற்ற நிறுவனமாக பதிவு செய்துள்ளது.
இதேவேளை, நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பு ஓர் கனவு அமைப்பு என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியிருந்தார் என சிங்கள நாளிதழ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
வடகிழக்கில் புலிகளின்  வீழ்சிக்கு பின்னர் நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பினை புலிகளின் சட்ட ஆலோசகர் சட்டவாளர்  ருத்திரகுமாரன்  தலைமையில்  (பிரதமர்) உலகம்  முழுவதும்  இருந்து 134  உறுப்பினர்கள்  கொண்ட  சபையாக அமெரிக்காவின்  நியூ யோர்க்  நகரில்  இயங்கி  வருகின்றார்கள்.  இந்த  நிலையில்தான் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகளின்  போது  இந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசின்  பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றும்  போது  இறுதி யுத்த மனிதப் படுகொலை பற்றிய  ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் மற்றும் வலுவான  ஆதாரங்களை  சமர்பிக்கவுள்ளார்கள்.இதன்  மூலம் இலங்கை  அரசு  பாரிய  நெருக்கடிக்குள் சிக்க  அதிக  வாய்ப்புள்ளது.

MM Nilamdeen

Post Top Ad

Responsive Ads Here