. இஸ்ரேல் பாலஸ்தீன மண்ணில் ஆக்கிரமித்து கட்டிய, கட்டி வரும்
குடியிருப்புகளை சட்டப்படி செல்லாது என்றும், இனிமேலும்
ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க கூடாது என்றும், இஸ்ரேல் நடவடிக்கை, சர்வதேச கொள்கைகளுக்கு
எதிரானது என்றும் வலியுறுத்தி, எகிப்து ஒரு
தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல்
செய்திருந்தது.
இந்த தீர்மானத்தின் மீது நேற்று இரவு வாக்கெடுப்பு நடைபெற்றது.
எதிர்ப்பு இன்றி 14-0 என்ற வாக்குகளில் இந்த
தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது இஸ்ரேலின் நட்பு நாடாக அறியப்பட்டு வரும் அமெரிக்கா
இந்த தீர்மானத்திற்கு எதிராக தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த மறுத்துள்ளது.
எனவே 1967 க்கு பிறகு பாலஸ்தீன
நிலப்பரப்பில் இஸ்ரேல் ஏற்படுத்திய குடியிருப்புகள் சட்ட அங்கீகாரத்தை இழக்க
உள்ளது. அதேபோல இனிமேல் புதிய குடியிருப்புகளை அமைக்கவும் முடியாது.
இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபராக உள்ள ட்ரம்ப் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தும், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாமல் ஒதுங்கிக்கொண்டது. ஆனாலும் 1 9 6 7 க்கு முன்னர் கட்டிய வீடுகளையும் தற்போது கட்டபட்டு வரும் வீடுகளையும் யாராவது உடைக்க முடியுமா அல்லது தற்போது கட்டப்பட்டு வீடுகளை யாராவது தடுக்க முடியுமா ?