இலக்கியவாதி Boutha Ayyanar Boutha Ayyanar சென்னை கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள செட்டிநாட் தனியார்
வைத்தியசாலையில் சந்தைப்படுத்தல் முகாமையாளராகப் பணியாற்றி வருகிறார்.
130 ஏக்கரில் அமைந்த நிலப்பரப்பில் வைத்தியசாலை பல்வேறு
மருத்துவப் பிரிவுகளுக்கான கல்லூரிகள் என ஒரு மருத்துவ சாம்ராஜ்யமே அங்கு இயங்கி
வருகிறது.
வைத்தியசாலையின் நிறைவேற்று அதிகாரியான டாக்டர் பிரபுவுடன் கடையாற்றி
வருகின்றார்
இதய அறுவை சிகிச்சைக்காக இலங்கையில் இருந்து பலர் பல்வேறு வைத்தியசாலைகளுக்குச்
செல்கிறார்கள். ஏறக்குறைய இந்திய ரூபாய்களில் மூன்றரை லட்சங்கள் செலவாவதாகச்
சொல்கிறார்கள்.
ஆனால் செட்டிநாட் வைத்தியசாலையில் இந்திய ருபாய்களில் ஒரு
லட்சத்து அறுபதாயிரம் ருபாய்களில் இலங்கையருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்து
கொடுக்கத் தயாராக இருப்பதாக டாக்டர் பிரபு தெரிவித்துள்ளார். ..
ஐசியு பிரிவு, நோயார் தங்கும் அறைகள்
யாவும் மிகவும் விசாலமானவையாக அமைந்துள்ளன. நோயாளி தங்கும் அறைகள் இரண்டு
பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு பிரிவில் நோயாளி கூடவே இருப்பவர்
சமைத்துச் சாப்பிடுவதற்கான சமையலறையாகும். நோயாளியை அட்மிற் செய்தால் வெளியே
அலைந்து உணவு தேடி திரியத் தேவையில்லை.
மருத்துவக் கல்லூரியும் சேர்ந்து அமைந்திருப்பதால் சிறந்த
வைத்தியர்கள் தம்மிடம் இருப்பதாகவும் புற்று நோய் தவிர்ந்த ஏனைய எல்லா
நோய்களுக்கும் தமது வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை உண்டு என்றும் தெரிவித்தார்
டாக்டர் பிரபு.
தேவையுடையவர்கள் இந்த வைத்தியசாலையைப் பயன் படுத்திக்
கொள்ளலாம் என்பதற்காகவே இந்தத் தகவலை தந்துள்ளோம்.நல்லதொரு வாய்ப்பு.
வீணாக பணத்தை செலவு செய்து அப்போல்லோ போன்ற பணம் விழுங்கும் வைத்தியசாலையை தவிர்த்து செட்டிநாட் தனியார் வைத்தியசாலையில் வைத்தியம் பெறுவதற்கு தெரிவு செய்வது நல்லது..
வைத்தியசாலை பற்றிய தகவல்களை இணையத்திலும் பெற்றுக் கொள்ள
முடியும். பௌத்த ஐயனாரை 0091 90947 83000 என்ற இலக்கத்தில் தொடர்பு
கொள்ள முடியும். .நன்றி : தகவல் கவிஞர் எழுத்தாளர் .அஷ்ரப்
சிஹாப்தீன்.
செய்தி : M.M. நிலாம்டீன் ஊடகம் ..
