மீனாட்சிபுரம் TO சென்னை புழல் ஜெயில்-சுவாதி கொலை நடந்தது என்ன -விசேட புலனாய்வு கட்டுரை-பாகம் -05 - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, August 1, 2016

மீனாட்சிபுரம் TO சென்னை புழல் ஜெயில்-சுவாதி கொலை நடந்தது என்ன -விசேட புலனாய்வு கட்டுரை-பாகம் -05

மீனாட்சிபுரம் TO  சென்னை புழல் ஜெயில்-சுவாதி கொலை        நடந்தது   என்ன  -விசேட புலனாய்வு   கட்டுரை-பாகம் -05

ஸ்வாதியை ராம்குமார் கொலை செய்தது "ஒரு தலைக்காதல்' என்றும் ராம்குமாரை தவிர வேறு யாருக்கும் இக்கொலையில் சம்பந்தமில்லைஎன்றும் சென்னை மாநகர கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் அவசரமாக; அழுத்தமாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியும், கைது செய்யப்பட்ட போது ராம்குமாரின் கழுத்து அறுபட்டதுமே இந்த மர்மங்களையும் சந்தேகங்களையும் நீடிக்கச் செய்தன.
விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், ""ராம்குமாருக்கும் ஸ்வாதிக்கும் அறிமுகம் உண்டு. அதை நட்பளவில் வைத்துக்கொண்டார் ஸ்வாதி. ஆனால் ராம்குமார் அதை காதலாக வெளிப்படுத்த, அதனை ஸ்வாதி மறுத்ததுடன் அவனை இழிவாக பேசியது கொலைவெறிக்கான காரணமாக அமைந்துவிட்டது. என்கின்றனர்  போலீஸ் ..
மீனாட்சிபுரம் போன்ற சென்சிட்டிவ்வான ஏரியாவுக்குள் ஆதாரம் இல்லாமல் போலீஸ் நுழைந்துவிட முடியாது. போலீஸ் பிடிக்க வந்தால் கழுத்தை அறுத்துக்கொள்ளச் சொல்லி யாரோ அவனுக்கு ஐடியா கொடுத்திருக்கிறார்கள். போலீஸ் விசாரணையிலிருந்து தப்பிக்கவே, சாவு ஏற்படாத வகையில் தொண்டைக்கு மேல்பகுதியில் கழுத்தை அறுத்துக் கொண்டான். என்கின்றனர்  போலீஸ்
போலீஸ்தான் அறுத்தது என்று பிரச்சினையாக்கி விடுவான் என்றுதான் அவன் அறுத்துக்கொண்டு, இரத்தம் வழியும் நேரத்தை வீடியோவாக பதிவு செய்து வைத்தோம்.அவன்தான் கொலையாளி என்பதற்கான தொழில்நுட்பரீதியான பல ஆதாரங்களை திரட்டி வைத்திருக்கிறோம். கண்ணால் பார்த்த சாட்சிகளையும் திரட்டிக்கொண்டிருக்கிறோம். என்கின்றனர்  போலீஸ்
போலீஸ் தரப்புக்கு நேர் எதிராக இருக்கிறது புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்து விட்டு வந்த ஓய்வுபெற்ற மாஜிஸ்திரேட்டும் தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவருமான வழக்கறிஞர் ராம ராஜனின்  கருத்துக்கள் 
மீனாட்சிபுரத்திலுள்ள ராம்குமாரின் தாய் புஷ்பா உட்பட அவரது குடும்பத்தினரை சந்தித்துவிட்ட ""ராம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமலேயே வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தானாக ராம்குமாருக்காக பெயில் பெட்டிஷன் போட்டுவிட்டார் என்று அரசு வக்கீல் வாதாட, ஒருகட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி விலகிவிட்டார்.
அதற்குப்பிறகுதான், ராம்குமாரின் அப்பா பரமசிவம் எங்களது அமைப்பை நாடி வந்து இந்த வழக்கில் எங்களுக்கு சட்ட உதவிகளை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சக வழக்கறிஞர்கள் ராமமூர்த்தி, ஜான்சன், பழனி வேல், குருமூர்த்தி ஆகியோருடன் புழல் சிறைக்குச் சென்று, முறையான ஆவண மனுவை காட்டிய பிறகும்கூட ஜெயில் அதிகாரிகள் ராம்குமாரை சந்திக்க அனுமதிக்கவில்லை.
நான் ஓய்வுபெற்ற நீதிபதி என்று சொன்ன பிறகுதான் அனுமதித்தார்கள். அப்போதும், ராம்குமாரை என்னிடம் தனியாக பேச அனுமதிக்கவில்லை.அவருக்கு பக்கத்திலேயே போலீஸ்  வந்து நின்றுகொண்டதால் உண்மையான விஷயங்களை ஃப்ரீயாக பேசமுடியவில்லை.
ராம்குமார் மிகுந்த மன உளைச்சலில் இருப்பது தெரியவந்தது. காயங்கள் இன்னும் சரியாக ஆறவில்லை. அதனால், மெதுவாகத்தான் பேசுகிறார். ராம்குமாரிடம் நான் பேசியபோது, "இதுவரைக்கும் நான் யார்க்கிட்டேயும் எதுவும் தகவல் கொடுக்கல' என்றபடி பேசியவர், "ஒரு வருடத்துக்கு முந்தியே ஸ்வாதியை எனக்குத் தெரியும்.
ஸ்வாதி கொலைக்கு நான் காரணமில்ல. நீதிமன்றத்தில் உண்மைகளை சொல்வேன்'னு சொன்னார். ராம்குமாரின் கழுத்தில் உள்ள காயத்தின் தன்மையை விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வு பண்ணினாலே யாரு கழுத்தை அறுத்ததுங்குற உண்மை வெளியில வரும்.
ராம்குமாரின் வீட்டுக்குப்போய் தாய், சகோதரியிடம் விசாரிச்சேன். கைது பண்ணினப்போ ராம்குமார் தங்கையின் பையிலிருந்து பொருட்களை வீசிவிட்டு வெறும் பையை எடுத்துக்கிட்டுப் போயிருக்கு போலீஸ்.அதை, எதுக்கு எடுத்துக்கிட்டுப் போனாங்கன்னு தெரியல.
ராம்  குமார்  அப்பா   பரமசிவன்   மீண்டும் கருத்து
ராம்குமாருக்கும் இந்தக் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லைங்கிறதை எங்களால நிரூபிக்க முடியும்''’என்கிறார் உறுதியாக. ராம்குமார் அப்பாவின் பேச்சும் இதுபோலத்தான் இருக்கிறது. ""எங்க குடிசை வீட்டுக்கு பின்னாலதான் என் பையன் படுத்திருப்பான். வீட்டுக்குள்ள நான், எனது வீட்டம்மா, என் பொண்ணுங்க இரண்டும் படுத்திருந்தோம். என்னை உசுப்பி சத்தம் கொடுத்தாங்க.
கரண்ட ஆப் பண்ணிருக்காங்க. உங்க பையன் எங்க படுத்திருக்கான்னு கேட்டாங்க. வீட்டுக்குள்ள படுத்திருக்கான்னு வீட்டுக்குள்ள கூப்பிட்டுப் போறேன். கூட்டிட்டுப்போனது அங்கப் போயி பாக்குறன்... போலீசு தூக்கி என் பையனை கிழக்கே தூக்கி வச்சிக்கிட்டு தலையை சாய்ச்சிக்கிட்டு, என் பையனுக்கு கழுத்தெல்லாம் சாய்ந்துகிடக்கு. இரத்த வெள்ளத்துல கிடக்குறான்.என் பையன் செத்துபோனானோன்னு மயங்கி கீழே விழுந்தேன்.
அதற்குள்ள எங்க ஊரு பொதுமக்கள் கூடிட்டாங்க.108 ஆம்புலன்ஸ் வரத்துக்குள்ள இவன் செத்துருவான்னு நினைச்சு, காவல்துறை அதிகாரி பாலமுருகன், என் பிள்ளையை போலீஸ் வண்டியிலேயே தூக்கிக் கொண்டு போயி தென்காசி மருத்துவமனையில் சேத்துட்டு, பையனுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து சென்னைக்கு கொண்டு போக நினைச்சாங்க.
என் வீட்டம்மாவையும், பொண்ணையும் 200 ரூபா கொடுத்து நைட்டு 12 மணிக்கு மேல தெருவுல விட்டுட்டாங்க. என் பையன் மேல எந்த தப்பும் இருக்காது. இங்க வீட்டுக்கு வந்தா லும் அனாவசியமா பேசமாட்டான். யாராவது கூப்பிட்டு கேட்டா பதில் சொல்லுவான். தொழுவத்துக்கு போவான். ஆட்ட மேய்க்க போவான். நைட்டு 7 மணிக்கு மேல ஆட்ட அடைக்க வீட்டுக்கு வருவான்.
விடியங்காத்தால பேப்பர் வாங்க போறது அவனுக்கு பழக்கம். வேற எந்தமாதிரியான எதுவும் அவனுக்கு இருக்காது. போலீஸு தேடிவரும்ங்குற மாதிரியான எண்ணமே இல்லை. அப்படியிருந்தா எங்களுக்கிட்ட சொல்லியிருப்பான். பப்ளிக்கா வீட்டுக்குள்ள படுக்க மாட்டானே'' என்கிறார் வேதனைக் குரலில்.
கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, அதே நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் ஸ்வாதியிடம் வாக்குவாதம் செய்த இளைஞன், திடீரென்று ஸ்வாதியின் கன்னத்தில் அறைந்தான்என்று வாக்குமூலம் கொடுத்த உதவி பேராசிரியர் தமிழ்ச்செல்வனிடம் கொலையாளி தப்பி ஓடும் புகைப்படத்தை போலீஸார் காண்பித்துக் கேட்ட போது, "அவன் இவன் இல்லை'’என்று சொல்லியிருக்கிறார்.
அப்படியென்றால், அந்த அவன்யார்? அவனுக்கும் இந்தக் கொலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரிக்க வேண்டும்'' ’என்கிறார் ஏ.எஸ்.மேன்ஷனில் தங்கியுள்ள இளைஞர் மோகன்.
ஸ்வாதி குடும்பத்தினர் இன்னும் வேதனையிலிருந்து மீளாததால், போலீசுடனான அவர்களின் ஒத்துழைப்பு குறைவாகவே உள்ளது. ராம் குமார் எப்போது ஸ்வாதிக்கு அறிமுகமானான், அவனைப் பற்றி ஸ்வாதி தன் வீட்டிலோ நட்பு வட்டத்திலோ சொல்லியிருந்தாரா என்ற விசா ரணையை மேற்கொண்டிருக்கிறது காவல்துறை.
ராம்குமாரிடமிருந்து கைப்பற்றிய செல்போன் எங்கே? ராம்குமாரின் நண்பன் என்று சொல்லப்படும் சூர்யபிரகாஷிடம் போலீஸ் விசாரணை நடத்தாதது ஏன்? நண்பர்கள் மூலமாகவும் நண்பர்களுக்காகவும் லட்சக்கணக்கில் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபட்டு பணப்பிரச்சினை ஏற்பட்டதால் ஏற்பட்ட கொலையா? என்று அடுக்கடுக்கான சந்தேகங்கள் எழும்பிக்கொண்டிருக்கிறது.
இந்த சந்தேகங்களைக் கடந்து, ராம் குமார்தான் கொலையாளி என்பதற்கான ஆதாரங்களை சேகரிப்பதில் போலீஸ் தீவிரமாகி விட்டது.
குறிப்பாக, அவன் தங்கியிருந்த ஏ.எஸ். மேன்ஷனில் உள்ளவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று ராம்குமார் காலை 6:15 மணிக்கு வெளியில் சென்று 6:45 மணிக்கு மேன்ஷனுக்கு வந்துவிட்டான் என்று வாக்குமூலம் கொடுக்கச்சொல்லி நெருக்கடி தருகிறது.என்ற ஒரு  தகவல்  பலமாக   உள்ளது 
ராம்குமாரை அந்த மேன்ஷனில் சேர்த்துவிட்ட அவரது அத்தை மகன்  மதனையும் விசாரித்துள்ளது. கோர்ட்டுக்கு இந்த வழக்கு வரும்வரை பல திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.
ஆட்டோகாரர்  கருத்து
 கொலை செய்யப்பட்ட சுவாதி, வீட்டில் இருந்து தினமும் ஒரே ஆட்டோவில்தான் ரெகுலராக ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் உள்ளார். ஆட்டோவில் ஏறி சுவாதி உட்கார்ந்ததுமே, “நீங்க கேட்ட லேப்டாப்பை கொடுத்துட்டேன். பென்ட் ரைவையும் கொடுத்துட்டேன், இனியும் உங்களுக்கு என்ன பிரச்சினை, என்னை நிம்மதியாக இருக்க விடுங்களேன்என்று செல்போனில் சத்தமாய்ப் பேசியபடியேதான் ஒவ்வொரு நாளும் பயணம் செய்வார். இதைச் சம்மந்தப்பட்ட அந்த ஆட்டோ டிரைவரிடம், ரயில்வே போலீசார் வாக்குமூலமாகப் பெற்றுள்ளனர்.
சுவாதி யாரிடம் அப்படி செல்போனில் கத்திக் கொண்டே வந்தார் சுவாதியை மிரட்டியவர்கள், அவருடன் பெங்களூருவில் சண்டை போட்டவர்களா என்பதைக் காவல் துறையினர் மக்களுக்கு சொல்ல வேண்டும், அறிவிக்க வேண்டும்.சுவாதியின் செல்லில் கடைசி நிமிடம் வரை, ராம்குமார் கான்டாக்ட்டில் இருந்துள்ளார்.
இதை பாசிட்டிவ் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம், நெகடிவ் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், ராம்குமாரின் போட்டோ ஊடகங்களில் வந்து விட்ட பிறகு,
ஐடென்டிபிகேஷன் பரேடு நடத்துவது செல்லாது என்றே சொல்ல வேண்டும்.
.சிறையில்   ராம் குமாரை  சந்தித்த  வக்கீல்கள் .
போலீஸார்தான் கழுத்தை அறுத்தனர்; சுவாதி கொலையின் உண்மைக் குற்றவாளிகள் வேறு, வழக்கை திசை திருப்புகிறது போலீஸ்' என பல்வேறு சந்தேகங்களை மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் புழல் சிறையில், குற்றவாளியைக் கண்டறியும் அடையாள அணிவகுப்பை நடத்தினார் நீதிபதி சங்கர். சுவாதியின் தந்தை மற்றும் ரயில் நிலையத்தில் கடை வைத்திருக்கும் இருவர், அடையாள அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் ராம்குமாரைச் சந்திக்கச் சென்றனர் வழக்கறிஞர்கள் ராமராஜ், மனோகரன், மார்க்ஸ் ரவீந்திரன், ஜான்சன் உள்ளிட்டவர்கள்.
சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள், ராம்குமார் குற்றவாளியல்ல' என்ற  கருத்தை  வெளியிட்டனர் உண்மையில் ராம்குமாரிடம் பேசப்பட்டது என்ன... சுவாதியோடு அவருக்கு இருந்த நட்பு எப்படிப்பட்டது' என இயல்பாக எழும் கேள்விகளை, புழல் சிறையில் ராம்குமாரைச் சந்தித்து திரும்பிய வழக்கறிஞர் ஒருவர்   தெரிவித்த  போது
போலீஸாரின் விசாரணை சரியான திசையில்தான் செல்கிறது. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், வழக்கின் பின்புலத்தையோ கொலைக்கான காரணங்களையோ ஆய்வு செய்யாமல் 'ஒருதலைக் காதல்' என்று சொல்வது மிகத் தவறானது.
சுவாதியின் செல்போன் நம்பர் என்னவென்று ராம்குமாருக்குத் தெரியவில்லை. சமூக வலைதளங்களில் இருவருக்கும் இடையில் பலமான நட்பு இல்லை.
சென்னைக்கு ராம்குமார் வந்ததற்கான நோக்கம் படிப்பதற்கோ, வேலையில் சேருவதற்கோ இல்லை என்பதை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது.அவர் வந்த நோக்கம் மற்றும் சுவாதி கொல்லப்பட வேண்டிய அவசியம் என்ன என விடை தெரியாத கேள்விகள் அணிவகுக்கின்றன.
சுவாதியைக் கொல்வதற்கு ராம்குமார் கூலிப்படையாகச் செயல்பட்டாரா என்ற ரீதியிலும் விசாரணை செல்ல வேண்டியிருக்கிறது.
ஏனெனில், இந்த கொலை வழக்கில் ராம்குமாரை இயக்கிய சக்திகள் சிலர் இருப்பதாக வலுவான சந்தேகம் எழுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கறிஞர் என்பதையும் தாண்டி, சில உண்மைகளைச் சொல்ல விரும்புகிறேன்" என்றவர், ராம்குமாரோடு நடந்த உரையாடலை விவரித்தார்.
சென்னை வந்த நோக்கத்தைப் பற்றி தெளிவான பதில் அவரிடம் இல்லை. அரியர்ஸ் எக்ஸாம் எழுத சென்னை வந்தேன் என்றார்.
நெல்லையிலே அரியர்ஸ் எக்ஸாம் எழுத முடியுமே என நாங்கள் கேட்டபோது, கவர்மெண்ட் எக்ஸாம் எழுத வந்தேன் என்கிறார்.யார் கூட்டிக்கொண்டு வந்தார்கள் என்று கேட்டால், எந்தப் பதிலுமில்லை.
போலீஸார் கைது செய்தபோது, நானே ரெண்டு பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டேன் என்கிறார். பிறகு, போலீஸுடன் வந்தவர்கள் அறுத்தார்கள் என்றார்.பேஸ்புக், வாட்ஸ் அப் என சுவாதியோடு எந்தத் தொடர்பும் இல்லை என்றார். சுவாதியைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் தலையைக் கீழே குனிந்து கொண்டார். அவரால் அந்தக் கேள்வியை எதிர்கொள்ள முடியவில்லை.இதனாலேயே கூலிக்காக இந்தக் கொலை நடந்திருக்குமோ என சந்தேகம் கிளம்புகிறது.

அந்தப் பெண்ணின் கல்வி, தகுதி, சமூக அந்தஸ்து ஆகியவற்றையும் ராம்குமாரின் சமூக அந்தஸ்து, படிப்பு, வருமானம் போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான்.
சுவாதியிடம் சிலமுறை இவர் பேசியிருக்கிறார். ஆனால் நெருக்கம் இல்லை என்கிறார்.
சென்னை வந்த நோக்கம், குறுகிய காலகட்டம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், கூலிக்காக கொலை செய்யவே சென்னை வந்திருக்க வாய்ப்பு அதிகம். தவிர, கொலை நடந்த அன்றே சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார்.
அவர் அங்கேயே தங்கியிருந்திருந்தால்கூட இந்த சந்தேகம் வந்திருக்காது. இந்தப் பெண்ணின் கடந்தகால நட்புகளில் பாதிக்கப்பட்டவர்கள், ராம்குமாரை வைத்து கொலைச் செயலை அரங்கேற்றியிருக்கலாம்.
சுவாதி கொலையைப் பற்றி எதுவும் பேசாமல் வார்த்தைகளை விழுங்குகிறார் ராம்குமார். எங்களிடம் திக்கித் திணறி பேசுகிறார். ராம்குமாரையும் கடந்து வழக்கின் விசாரணை செல்ல வேண்டும் என விரும்புகிறோம்.
சுவாதி சாக வேண்டும் என விரும்பியவர்கள் யார்? ராம்குமாரைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன? கூலிப்படையை நோக்கி போலீஸாரின் கவனம் செல்லவில்லை.
அப்படிச் சென்றால் சுவாதியின் பழைய நட்புகள் வெளியில் தெரிந்துவிடும் என மேலிடம் வரையில் செல்வாக்கு விளையாடுகிறது. அதனாலேயே ராம்குமாரோடு வழக்கை முடித்துக் கொள்ள போலீஸார் விரும்புகின்றனர்.
இதுதான் உண்மை.
கொலை செய்வதற்காக சில வாக்குறுதிகள் ராம்குமாருக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம். ராம்குமாரிடம் பேசியபோது, 'சொந்த ஊருக்குள் முந்தைய காதலோ, அடிதடி தகராறோ எதுவும் இல்லை' என்கிறார்.
நிறைய விஷயங்களைப் பேச அவர் தயங்குகிறார். அவர் மனதுக்குள் நிறைய உண்மைகள் புதைந்திருக்கின்றன.மனரீதியான நெருக்கடிக்கு அவர் ஆளாக்கப்பட்டிருக்கிறார். போலீஸாரின் நிர்பந்தம்தான் இதற்குக் காரணம். கொலைக்கான பின்னணி வெளியில் வருவதை காவல்துறை விரும்பவில்லை. .
புழல் சிறையில் நாங்கள் பேசிய 45 நிமிடங்களும், ராம்குமார் மீதான சந்தேகத்தை அதிகரிக்கவே செய்திருக்கின்றன" என்றார் வக்கீல். ராம்குமாரை போலீஸ் கஸ்டடியில் விசாரித்தாலும், ஏற்கெனவே சொல்லப்பட்ட விஷயங்கள் மட்டுமே வருவதற்கு வாய்ப்பு அதிகம்.
-தொடரும் -



Post Top Ad

Responsive Ads Here