சவூதியில் வேலை இழந்து வரும் இலங்கை இந்தியர்கள் - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, August 1, 2016

சவூதியில் வேலை இழந்து வரும் இலங்கை இந்தியர்கள்

(எம்;.எம்;.நிலாம்டீன் )

சவூதி அரேபியாவானது பொருளாதார சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளதால் அங்கு பணிபுரியும் இலங்கையர் பலர் தொழில்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தற்போது சவூதியில் பணிபுரிந்த 12 பேர் தொழில்வாய்ப்பை இழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம்  தெரிவித்துள்ளது .
மேலும் சவூதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவினால் அங்குள்ள பல நிறுவனங்கள் மூடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சில   கம்பனிகள்   மூடப்பட்டு  வருவதாகவும்  சொல்லுகின்றார் .
 வேலை  இழந்த  10  லட்சம்  இந்தியர்கள்   
வுதி அரேபியாவில், வேலையிழந்து சிக்கி தவிக்கும் 10,000 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
சவுதியில் இந்தியர்கள் அனைவருக்கும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதால், யாரும் பசியோடு இருக்க மாட்டார்கள் என்றும் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

அதில், இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் பணியை பார்வையிட இணை அமைச்சர் வி.கே. சிங் சவுதி அரேபியா சென்று உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தூதரகம் முகாம்களை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதை உறுதிசெய்ய சவுதியில் உள்ள வெளிநாட்டு மற்றும் தொழிலாளர் அலுவலகங்களுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.







Post Top Ad

Responsive Ads Here