-- இந்தியா முழுவதும் இன்றைய தலைப்பு செய்தி-சுவாதி கொலையாளி - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, July 2, 2016

-- இந்தியா முழுவதும் இன்றைய தலைப்பு செய்தி-சுவாதி கொலையாளி

தமிழ் நாட்டை உலுக்கிய IT Engineer இளம் சுவாதி கொலை..கொலையை முஸ்லிம் வாலிபர் செய்துள்ளார் என்றும் அது பிலால் மாலிக் என்றும் மிக வேகமாக தமிழ் நாடு முழுவதும் செய்திபரவியது .ஆக காதல் கொலையை ஒரு மதக் கலவரமாக மாற்றி அதைஒரு காவிச் சண்டையாக காட்ட பெரும் முயற்சி எடுக்கப்பட்டது.
நடிகர் YG மகேந்திரந்தான் முதல்முதலாக இந்தக் கொலை முஸ்லிம் செய்துள்ளார் என்று பரப்பினார் ..
ஆனால் சில காவிகளின் இந்ததந்திரத்தை அறிந்து கொண்ட பல இந்துப் பெரியார்கள் அமைப்புக்கள் சிலரின் இந்த சில்லறை தனத்திற்கு பெருத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது.
ஆனால் தமிழ் நாட்டு போலீஸ்க்கு ஒரு சவாலாக இந்தக்கொலை அமைந்ததால் சென்னை மாநகர போலீஸ் ஆணையாளர் DK ராஜேந்திரன் DGP நேரடியாக செயலில் இறங்கினார். அவரது பணிப்புரையின் கீழ் மேலதிக ஆணையாளார் சங்கர் IPS 10 தனிப்படை அமைத்து வேட்டையில் ஈடுபட்டனர்.
போலீஸ் வெளியிட்ட போட்டோவும் சுவாதியின் போனும்தான் துப்பு துலக்கியதாக DSP முத்துவேலு பாண்டி IPS சொல்கின்றார்.அத்துடன் தமிழக ஊடகம் ஒரு வாரமாக சுவாதி கொலையை பெரிய இசுவாக்கியதால் கொலையாளி தப்பிக்க வாய்ப்பே இல்லை என்கிறார் பாண்டி IPS.
எப்படி துப்புத்துலக்கியது
=======================
கொலை செய்யப்பட்ட சுவாதியின் மொபைல் போனை கொலையாளி சம்பவ இடத்திலிருந்து எடுத்து சென்றுள்ளான். இதனையறிந்த போலீசார், சுவாதியின் நண்பர் ஒருவரின் எண்ணிலிருந்து சுவாதியின் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்., ஒன்றை உடனடியாக அனுப்பியுள்ளனர்.

கொலை நடந்த நாளன்று காலை 8 மணி முதல் 8.30 மணி வரை சுவாதியின் மொபைல் போனை கொலையாளி ஆன் செய்து வைத்துள்ளான். அப்போது எஸ்.எம்.எஸ்., டெலிவரி ஆகியுள்ளது. இதனை வைத்து ஆய்வு செய்த போலீசார், செல்போன் சிக்னல் சூளைமேடு பகுதியில் இருந்ததை கண்டறிந்தனர்.
இந்த இடத்தில்தான் நாம் இந்தக் கொலையை சுவாதி குடும்பத்தினர் மீது சந்தேகம் கொண்டோம்.ஏன் இது ஒரு கௌரவக்கொலை யாக இருக்காதா என்று சந்தேகம் கொண்டோம். எமது சந்தேகம் போலீஸ் க்கும் வந்துள்ளது.இந்தக் கோணத்தில் போலீஸ் சுவாதியின் குடும்பத்தை விசாரணை என்று பெருமளவு நோண்டி விட்டார்கள்.
காரணம் கொலையாளி சூளைமேடு ஏன் போனான் .அங்குதான் இறுதியாக சுவாதி போன் OFF செய்யப்பட்டுள்ளது.அதனால் யாருக்கும் இந்தசந்தேகம் வரும் .கொலையை திசை திருப்ப or சுவாதி குடும்பம் மீதுபோட அதுவோடு முஸ்லிம் boy லவ் கேஸ் அதனால் அதுவொரு கௌரவக கொலையாக திருப்ப இந்த கொலையாளி செய்திருக்கலாம் .
இதனையடுத்து கொலையாளியின் புகைபடத்தை கொண்டு, சூளைமேடு பகுதியில் வீடுவீடாக போலீசார் சோதனை நடத்தினர்.
தகவல் கிடைத்தது
====================

கொலையாளியின் புகைபடத்தை பார்த்த சூளைமேடு பகுதியிலுள்ள மேன்ஷன் (விடுதி) காவலாளி ஒருவர்போலீசாரிடம், துப்பு கொடுத்துள்ளார். போலீசாரிம் கொலையாளி ராம்குமார் போல்உள்ளான் எனவும்,
நெல்லையை சேர்ந்தவன் எனவும் காவலாளி தெரிவித்துள்ளார். இதனையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், கொலையான நாளிலிருந்து ராம்குமார் மேன்ஷனிலிருந்து மாயமாகி இருப்பதைக் கண்டறிந்தனர். இதனையடுத்து நெல்லை விரைந்த தனிப்படை போலீசார், ராம்குமாரின் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்
ராம்குமார் செங்கோட்டை அருகிலுள்ள மீனாட்சிபுத்தை அடுத்த பன்பொழி கிராமத்தை சேர்ந்தவர்.தாத்தா வீட்டில்இருந்த போதுதான் பிடிபட்டான்.
ஒரு தலைக் காதல்
============
சுவாதியுடன் ராம்குமாருக்கு ஒருதலைக்காதல் ஏற்பட்டுள்ளது. ராம்குமார் 3 மாதமாக முயற்சித்தும் தனது காதலை சுவாதி ஏற்காததால், சுவாதியை கடந்த 3 மாதங்களாக தொல்லை கொடுத்துவந்துள்ளான். சுவாதிக்கு நடு ரோட்டில் வைத்து அடித்துள்ளான்.அறைந்துள்ளான்...ஆனால் சுவாதி இதைப் பெரிசு படுத்தவில்லையாம்.. இவைகள் முகப்புசெய்திகள் .

கொலைகாரனுக்கு அவனதுஒரு நண்பனும் உதவி புரிந்துள்ளானாம்.அவனையும் பிடிக்கவேண்டுமாம். கொலையாளி சிகிச்சை பெற்று வருகின்றான். .பேசுகின்றான் அவனது ஒருதலை காதல் கதை இன்று கிடைத்துவிடும் என்கின்றது சென்னை போலீஸ்.
நாம் இந்தக் கொலை மீது கொண்ட சந்தேகம்
========
1. ஒரு தலைக் காதல்
2. இருவரும் காதலித்துவிட்டு பிரிந்த வெறி
3. முஸ்லிம் boy யை காதல் கொண்டதால் இது 
ஒரு கௌரவக் கொலையாக இருக்கலாம்.

இந்த 2 விடயத்தை மிகஉறுதியாகவும் 3 ஆவது விடயத்தை ஒரு சந்தேகமாகவும் தந்திருந்தோம்..நமக்கு ஒரு முழுத் திருப்தி ..பாவி படிபட்டான் ஒரு மதக்கலவரம் தடுக்கப்பட்டுள்ளது..
சென்னை போலீஸ் க்கு வாழ்த்துக்கள் குவிகின்றது.. பாராட்டுக்கள் Madras Police commissioner Mr. DK Rajendran IPS and Chennai Commissioner Additional Mr.Mohan sankar IPS and DSP Muthuvelupandi IPS with Team---




எம்;.எம்;.நிலாம்டீன் 



Post Top Ad

Responsive Ads Here