சுவாதி கொலையாளி பிடிபட்டான் -ஒரு தலை காதலின் கோரமுடிவு - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, July 2, 2016

சுவாதி கொலையாளி பிடிபட்டான் -ஒரு தலை காதலின் கோரமுடிவு


IT Engineer சுவாதி கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சுவாதியை கொலை செய்ததாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரை பொலிஸார் நேற்று நள்ளிரவு செய்துள்ளனர்.
செங்கொட்டையை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராம்குமார் என்பவரை திருநெல்வேலியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, தாம் கைது செய்யப்பட போவதை அறிந்துகொண்ட ராம்குமார் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தற்போது நெல்லை, அரச வைத்தியசாலையில், சிகிச்சை பெற்றுவரும் ராம்குமார் குற்றத்தினை ஒப்புகொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த கொலை சம்பவம் தொடர்பில் 10 சிறப்பு தனிப்படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
முதல் கட்ட விசராணை
==================

ராம்குமார் சென்னையில் கடந்த 3 ஆண்டுகளாகவும், சூளைமேட்டை பொறுத்தவரை கடந்த 3 மாதங்களாக தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிவந்த இளம்பெண் சுவாதியை ஒருதலையாக அவர் காதலித்ததாகவும், சுவாதி காதலை ஏற்காததால் அவரை கொலை செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சூளைமேட்டில் உள்ள மேன்சனில் ராம்குமார் தங்கியிருந்ததாகவும், சுவாதி கொலைக்கு பிறகு அவர் சொந்த ஊர் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் வெளியிட்ட புகைப்படத்தினை கண்ட மேன்சன் மேனேஜர் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததாகவும், அதன் அடிப்படையிலேயே சென்னையில் இருந்து செங்கோட்டை விரைந்த தனிப்படை போலீசார் அவரை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.


எம்;.எம்;.நிலாம்டீன் 

Post Top Ad

Responsive Ads Here