பாகிஸ்தானில் கடந்த காலங்களில் ஆட்சி செய்த பல்வேறு அரசாங்கங்கள், தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் நாட்டில் கிடைப்பதாகக் கூறியுள்ளன.
2015-ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சினியோட் நகரில் இரும்பு, தாமிரம் மற்றும் தங்கத்தின் பெரிய இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார். மேலும் அந்த வளங்கள், பாகிஸ்தானுடைய செழுமைக்கு பங்களிக்கும் என்றும் கூறினார்.
அட்டாக் நகரில் சுமார் 700 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பிலான தங்கம் இருப்பதாக பஞ்சாப் மாகாணத்தின் சுரங்கத்துறை அமைச்சர் ஷேர் அலி கோர்ச்சானி கூறினார்.
அங்கு 32 கிலோமீட்டர் பரப்பளவில் 28 லட்சம் தோலாக்கள் தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார் என்று உள்ளூர் ஊடகங்கள் இந்த தங்கத்தின் விலை தற்போதைய சந்தை மதிப்பின்படி 600 முதல் 700 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் ஆகும்.தெரிவித்தன.
அட்டாக் நகரில் சிந்து மற்றும் காபூல் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் தங்க இருப்புகள் உள்ளதாக பஞ்சாபின் முன்னாள் சுரங்கத்துறை அமைச்சர் இப்ராஹிம் ஹசன் முராத் கடந்த வாரத் தொடக்கத்தில் கூறியிருந்தார்.
பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், தான் அமைச்சராக இருந்தபோது, அட்டாக் நகர் அருகே இயந்திரங்கள் மூலம் அப்பகுதியில் சிலர் தோண்டியதாக தகவல் வெளியானதாகத் தெரிவித்தார்.
விசாரணை நடத்தியபோது, அப்பகுதியில் தங்கம் தேடுவது தெரிந்தது, இதையடுத்து அப்பகுதியில் 144 தடை விதிக்கப்பட்டு, தங்கம் தேட தடை விதிக்கப்பட்டது என்றும் ஹசன் முராத் குறிப்பிடுகின்றார்.
அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் நிலவியல் ஆய்வு மையம், 25 கிலோமீட்டர் பரப்பளவில் 500 மாதிரிகளை சேகரித்துள்ளது. அந்த ஆய்வின் மூலம் அங்கு தங்கம் இருப்பதை உறுதி செய்ததாகவும் அவர் கூறினார்.
தற்போது கிடைக்கும் இந்த தகவல்களுக்குப் பிறகு, பாகிஸ்தானில் உண்மையில் தங்கத்தின் இருப்பு உள்ளதா, அவற்றிலிருந்து உண்மையில் எவ்வளவு தங்கம் எடுக்கப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது.
No comments:
Post a Comment