கடந்த பொது தேர்தலின் போது சுமந்திரன் தமிழ் கட்சி சார்பாக தோல்வி கண்டார்! ஆனால் கஜேந்திரன் அவரது கட்சி சார்பாக வெற்றி பெற்றுள்ளார்.
மாற்றத்தை நோக்கி System change என்ற ஜேவிபி யின் சுனாமி அலைக்குள் தமிழ் மக்கள் அள்ளுபடக்
கூடாது என்று பல நேர்காணல்களில் சொல்லி இருந்தேன்! ஆனால் தமிழ் கட்சி மீது மக்கள்
கொண்ட அதிருப்தி காரணமாக வடக்கில் 3 ஆசனங்களை ஜேவிபிக்காக தாரைவார்த்துக்
கொடுத்துள்ளோம்.அதன் பிரதி பலன்களை கட்டம் கட்டமாக வடகிழக்கில் அனுபவிக்கும் காலம்
வெகு தூரம் இல்லை.
மாகாண
சபை முறைமையை நீக்கம் Provincial State ?
இலங்கையில் மாகாண சபை
முறைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை
எடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய
அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி
செய்யவும் அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும்
சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும்
தெரிவிக்கையில்,
சுமார் 37 வருடகாலமாக நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமையால் நாட்டிற்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எவ்விதமான பலனும் இதுவரையில் கிடைக்கவில்லை.மாறாக இலங்கையில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையிலான நிலைமையே காணப்படுகிறது. எனவே சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை தோற்றுவிக்காத வகையிலான அரசியல் ரீதியிலான தீர்வுத்திட்டத்தை இந்த அரசாங்கம் முன்வைக்க வேண்டும் ..
தமிழ் மக்களின் அரசியல்
பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதாக கூறிய இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13ஆவது
அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தை
ஆரம்பகாலத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வந்துள்ளோம். நாட்டு மக்களின்
விருப்பத்துக்கு மாறாகவும் அமைச்சரவையில் கூட அனுமதி பெறாமலுமே ஒப்பந்தம்
கைச்சாத்திடப்பட்டது.
எனவே பயனற்ற மாகாண சபை முறைமைக்கு பதிலாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறக் கூடியதும் அனைத்து இன மக்களுக்கும் சமமாக உரிமையை பெற்றுக்கொள்ளும் வகையிலுமான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்படுகின்றது. இதற்காக இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் கேட்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு சொல்லுகின்றது..
ஆட்சி அதிகாரத்துக்கு வந்து குறுகிய காலங்களே ஆகின்ற நிலையில், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்னுரிமை அளித்து செயற்பட்டாலும், நிரந்தர தீர்வுகளுக்கான பல நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம். அரசு சொல்லுகின்றது...
பயங்கரவாதத் தடைச் சட்டம் Prevention
Terrorist Act
என்றுமில்லாதவாறு
வடகிழக்கில் மாவீரர் தினம் மிகவும் எழுச்சியுடன் நினைவு கூறப்பட்டுள்ளது. அரசின்
இறுக்கம் இல்லாது ராணுவத்தின் நெருக்குவாரம் இல்லாது நிகழ்வுகள் நன்றாகவே
நடந்துள்ளது! இது பாராட்டபட வேண்டிய
விடயம்தான்.
வடமாகாணத்தில் மாவீரர்
வைபவங்கள் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தி வெளிப்படுத்தப்பட்ட
சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்கு தமிழ் வாலிபர்கள் 3 பேரை கைது
செய்தனர்.
மற்றும் சிங்களவர் ஒருவர் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிராக இனவாதமாக பயங்கரவாதத் தடைச் சட்டம் நாட்டிற்கு தேவையானது என்று மிகவும் நீண்டகாலம் சமுக வலைத் தளங்களில் எழுதி வந்தவர்.
கைது செய்யப்பட்டவர் மருதானையில் வசிக்கும் நாற்பத்தைந்து வயதான
கெலும் ஹர்ஷன .கடந்த வாரம் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டார். மாவீரர் கொண்டாட்டங்கள் தொடர்பான பழைய தகவல்களை இம்முறை
இடம்பெற்றதாக சமூக ஊடகங்கள் மூலம் சந்தேக நபர்கள் பகிந்ததாகவும் , அதன் மூலம் நாட்டிலும்
பொதுமக்களிடமும் பயங்கரவாதம் சந்தேக நபர் தூண்டுதலொன்றை மேற்கொள்ள
முயற்சித்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என TID அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். TID அதிகாரிகள் நீதிமன்றில் சமர்பித்த “B”அறிக்கையில் PTA சட்டத்தின் கீழ் குற்றம்
சுமத்தபட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின்
தலைவர் வேலுப்பில பிரபாகரன் தொடர்பில் தமது கட்சிக்காரர் எதிர்க் கருத்தை
முன்வைத்துள்ளதாகவும், அது
தீவிரவாதத்தை தூண்டும் செயல் அல்ல எனவும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள்
நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இது பேச்சு மற்றும்
கருத்துச் சுதந்திரத்தின் கீழ் வெளியிடப்பட்ட கருத்து மட்டுமே எனவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின்
கீழ் இது குற்றமில்லை எனவும் தமது கட்சிக்காரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள்
நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றமில்லை எனவும்
கொண்டாடியவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கொழும்பு பிரதான நீதவான் தெளிவாக
தெரிவித்துள்ளார்.இதன்படி சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான
நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். நீதிபதி கொடுத்துள்ள தீர்ப்பை நாம் கவனிக்க
வேண்டும்.
அனுர தனது தேர்தல் பிரச்சாரத்தில் சொன்ன விடயங்கள் என்ன?
அரச சொத்துக்களை வீண்விரயம் செய்கிறார்கள் என்ற பெயரில் ஏலவே இருந்த அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் ஏனையோரின் பாவித்த வாகனங்களை கொண்டுவந்து காலிமுகத்திடலில் போட்டு Car Show காட்டியது.
கள்வர்களைப் பிடித்து சிறையிலடைப்போம் என்ற கூற்றையே வேதவாக்காக கொண்டு ஆட்சிக்கு வந்த அனுர வர்கள் ஆனால் இன்றுவரைக்கும் அவ்வாறு யாரையும் கள்வர் என்று சொல்லி பிடித்து சிறையிலடைக்கவில்லை!
IMF உடனான உடன்படிக்கையை “மக்களை பாதிக்கும் விடயங்கள்” இல்லாத உடன்படிக்கையாக மாற்றுவோம் என்றவர்கள் அவ்வாறான எந்தவித மாற்றமும் மேற்கொள்ளாமல் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட அதே உடன்படிக்கையையே தொடர்ந்தும் செயற்படுத்துவது.
உகண்டா மற்றும் பல நாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை நாட்டுக்கு கொண்டுவருவோம் என்றவர்கள், ஆட்சிக்கு வந்த பின்னர் நாங்கள் அப்படி சொல்லவேயில்லை என்று திருப்பியடித்தது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதங்கள் அத்தனையும் நிறுத்தப்படும் என்றவர்கள், தேர்தலுக்குப் பின்னர் வந்து நாங்கள் அப்படி சொல்லவேயில்லை என்றது.
ராஜபக்ஷ கூட்டம் திருடர்கள், அந்த கூட்டத்தை சிறையிலடைப்போம் என்றவர்கள், இன்று அந்த ராஜபக்ஷ கூட்டமே வந்து “எங்களைத் திருடர்கள் என்று சொன்னதை நிரூபியுங்கள், இல்லாவிட்டால் சட்டநடவடிக்கை எடுப்போம் என்று கூறியும், இவர்கள் அமைதியாக இருப்பது.
இன, மத, மொழி பாகுபாடு இல்லை என்று சொன்னவர்கள், ஆட்சியை ஆரம்பிக்கும்போதே இஸ்லாமிய இனத்தவர் யாரையும் அமைச்சுக்கு உள்வாங்காமல் “திறமையற்றவர்கள்” என்ற பொய் காரணத்தை கூறி ஒரு இனத்தை கேவலப்படுத்தியிருப்பது.
இது மக்களுக்கான அரசாங்கம், மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நாங்கள் வந்திருக்கிறோம் என்றவர்கள், நாட்டில் ஒரு வாரத்திற்கும் மேலாக ஏற்பட்டிருக்கும் அனர்த்த நிலைமைக்கு இதுவரைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் நிவாரணமும் வழங்காமல் இருப்பது.
தவிரக்க முடியாமல் போன பாஸ்போர்ட் வரிசை, நிர்ணயிக்க முடியாமல் உள்ளது.
ரணிலின் ஆளணி குழாம்!
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் திறைசேரி அதிகாரிகள் பதவியில் எவ்விதமான மாமாற்றமும் இல்லாமல் கோட்டபாய ரணில் ஆட்சியில் உள்ள அதிகாரிகளே உள்ளார்கள் .அதே ஊழல் பெருச்சாளிகள் அணி.
ஐ. எம்.எவ் ஒப்பந்தம் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே கடந்து போகின்றது. பயங்கரவாத தடைச்சட்டம் எந்த சமரசமும் இன்றி முன்னெடுக்கப்படுகிறது.. கோட்டாவின் வியத்மகவில் இருந்த புத்திஜீவிகள் என்று சொல்லுகின்ற சிலர், இந்த ஆட்சியிலும் ஜனாதிபதி ஆலோசகர் உட்பட பல பதவிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
தடுமாறும் அனுர அரசு
அனுர தனது ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது தேர்தல் பிரச்சார மேடைகளில் சொன்ன விடயங்கள் பலவற்றை நிறைவேற்ற முடியாமல் தடுமாறும் நிலையில் வடக்கில் இந்தியா கொண்டுவந்த 13 ம் திருத்த மசோதாவை நீக்குவோம் என்று மிரட்டி வருவது பெரும் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.உண்மையில் போலிஸ் காணி. நிதி அதிகாரம் இல்லாத மாகாண சபை என்பது தெருவில் 5 பேர் கூடி அரட்டை அடிப்பது போன்றது .அங்கு ஒன்றுமே இல்லை.
டில்வின் சில்வா கூறியுள்ள கருத்தை தட்டி விட முடியாது.அவர்தான் இந்த அரசை வழிநடத்துவது டில்வின் சில்வா.
அனுர தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை வழங்கினாலும் நடைமுறையில் அவர்களால் பல விடயங்களை நிறைவேற்ற முடியவில்லை.சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம், இலங்கை மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர், திறைசேரிக்கு புதிய செயலாளர் என்றெல்லாம் அறிவித்தல்களைத் தேர்தல் காலத்தில் மேடைகளில் சொல்லி வந்தாலும் பதவியை ஏற்ற பின்னர் உள்ளே நிலைமையைப் பார்த்துவிட்டு தடுமாறிப்போயுள்ளார்.
நிர்வாக ரீதியாக அரசுக்கு நிர்வாக அதிகாரிகள் ஒத்துழைப்பை வழங்குவதாகத் தெரியவில்லை.காரணம் நிர்வாக சேவை அதிகாரியாக இலாத சுங்க அதிகாரியான பேராசிரியர் நந்திகா சனத் குமனாயக்கா நியமனம் செய்யப்பட்ட விடத்தில் பல புகைச்சல் உள்ளது.
தமிழர் விடயத்தில் என்ன தீர்வு
வடக்கில் தமிழ் தரப்பு அரசியலை உடைத்து மக்கள் மத்தியில் ஜேவிபி தனது செல்வாக்கை தொடர்ந்து தக்கவைக்க மீன்பிடித்துறை அமைச்சர் சந்திரசேகரன் களம் இறக்கப்பட்டு மக்களோடு மக்களாக இயங்கி வருகிறார். இப்படியான நிலைமை நீடிக்குமானால் தமிழர் தரப்புக்கு தீர்வு தேவை இல்லை .தமிழர் பிரச்சினை எதுவும் இல்லை என்ற நிலைமை உருவாகும்.
தமிழர்களுக்கு ஈழம் , விடுதலை ,தீர்வு என்ற பேச்சே இருக்காது.தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் அரசியல்வாதிகள் தேவை இல்லை என்ற நிலமை உருவாகும்.அப்படியான நிலையில்தான் அரசாங்கம் தமிழ் பேசும் மக்களின் உரிமைளை பறிக்கும் சட்டங்களை சூசகமாக நிறைவேற்றி அரசாங்க வர்த்தமானி வெளியிடும்.
சுமந்திரனின் தேவை
இந்த மாதரி நிலையில்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் தேவை அங்கு தொக்கி நிற்கின்றது. காரணம் முஸ்லிம் தமிழ் தரப்பில் சட்ட வல்லுனர்கள் யாரும் இல்லை. முஸ்லிம் தரப்பில் அப்படி யாரும் இருந்தாலும் அவர்கள் அரசு எப்படிப்பட்ட சட்டத்தை கொண்டு வந்தாலும் அவர்கள் அதைப்பற்றி ஒரு போதும் எதிர்த்த வரலாறு இல்லை. தமிழ் என்று வருகின்ற போது அது தமிழ் தரப்பால் மட்டுமே எதிர்கொள்ள முடியும்.
ஜேவிபி ஆட்சி தலையை தடவி கோமணத்தை உருகும் நிலை ஒன்று வருகின்றது .பல வகையான அரசியல மாற்றங்களை தமிழ் மக்களின் உரிமைகள் கல்வி கலாச்சாரம் போன்ற விடயங்களில் நாடாளுமன்றம் ஊடாக பல மாற்றங்களை கொண்டுவரவுள்ளது . அப்போது நாம் சுமந்திரனை தேடவேண்டி வரும்.
தமிழ் தரப்பில் சிறந்த ஆளுமை கொண்ட சட்ட மேதையாக சுமந்திரன் மட்டுமே உள்ளார் .சுமந்திரன் தமிழ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் .. ஆனால் சுமந்திரன் மீது சில கார்ழ்ப்புணர்ச்சி கொண்ட தரப்புகள் ஆவர் மீது தொடர்ந்து அம்பு வீசி வருவது அவர் மீதான பொறாமையின் உச்ச கட்டம் .சுமந்திரனை தமிழ் கட்சி பயன் படுத்த தெரியாமல் தடுமாறுகின்றது.
காரணம் முடிவுகள் எடுக்கத் தெரியாமல் சிறிதரன் ,மாவை சேனா சிவஜானம் போன்றோர் தடுமாறி வருகின்றார்கள். இந்தப் பெருசுகளை நீக்கி விட்டு சுமந்திரன் கட்சியின் தலைமையை கொடுக்க வேண்டும் ..அதை விட்டு சுமந்திரன் மீது அம்பு அடிப்பதை எல்லோரும் நிறுத்த வேண்டும்.
வடக்கின் முதலமைச்சர் பதவியை எட்ட முயற்சி செய்யும் தொழிலதிபர்
வடக்கில் ஒரு புதிய தொழில் அதிபர் பல ஊடக நிறுவங்களின் உரிமையாளர் தமிழ் கட்சிக்குள் புகுந்து கொண்டு வடக்கின் முதலமைச்சர் பதவியை எட்ட முயற்சி செய்கின்றார். அந்த அவர் கட்சிக்குள் புகுந்து கொள்ள சுமந்திரன் மீது எங்கிருந்தோ பலரை கொண்டு வந்து ஊடக கருத்து என்று ஒரு வெறுப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்கள்.
கேட்பதற்கே அருவருப்பான நிகழ்ச்சியை மக்கள் மீது திணித்து வருவது கண்டிக்கத் தக்கது!வரா வாரம் சுமந்திரனுக்கே என்று ஒரு நிகழ்ச்சி . அனுர அரசு மீது தொடர்ந்து வன்மம் ..ஆரம்பத்தில் இருந்தே ரணிலுக்கு காவடி எடுத்து வந்தார்கள் ..
ஊடகம் என்ற போர்வையில் தங்களது சொந்த வணமத்தை கொண்டு கொட்டி வருகின்றார்கள் . அவரது திட்டம் என்பது முதலில் வடக்கு முதலமைச்சர் .அப்புறம் கட்சியின் தலைமை பொறுப்பை அடைவது . இதற்கு சுமந்திரன் முட்டுக் கட்டை என்ற தகவலும் உள்ளது .
ஆனால் தமிழர் தரப்புக்கு மட்டுமல்ல தமிழ் மொழி என்று வரும் போது சுமந்திரன்,கஜேந்திரன் ஆகியோர்களின் தேவை தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும்.
No comments:
Post a Comment