பிரதேச செயலர் M.H. கனி மீண்டும் கிண்ணியாவிற்கு இடமாற்றம்! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 23, 2022

பிரதேச செயலர் M.H. கனி மீண்டும் கிண்ணியாவிற்கு இடமாற்றம்!

 

கிண்ணியாவில் இருந்து திடீரன்று வெருகல் பிரதேச  செயலகத்திக்கு  இடமாற்றம் செய்யப்பட்ட  பிரதேச செயலர் M.H.கனி மீண்டும் கிண்ணியாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியாவில் இருந்து திடீரன்று வெருகல் பிரதேச  செயலகத்திக்கு  இடமாற்றம் செய்யப்பட்ட  பிரதேச செயலர் M.H. கனி வெருகலில்  1 வருடகாலமாக அங்கு கடமையாற்றி ஒட்டுமொத்த  தமிழ் மக்களின்  மனங்களை வென்று அந்த மக்களின் சகல நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்த முதலாவது முஸ்லிம் என்ற பெருமையுடன் வெருகலை விட்டு   வெளியேறியுள்ளார்.

இவரது கிண்ணியா இடமாற்றத்தை இரத்து செய்ய வேண்டும் என்று வெருகல் மக்கள்  ஒரு போராட்டத்தை எடுக்கவிருந்த நிலையில் வெருகலை விட்டு  ரகசியமாக   ஞாயிறு   தினம்  வெருகல்  செயலதை விட்டு வெளியேறியுள்ளார்.

கல்முனையில் இருந்து கிண்ணியாவுக்கு இடமாற்றம் பெற்று சென்ற  முகம்மது கனி  அங்கு  சென்ற நாள் முதல் சிறந்த  சேவை செய்துள்ளார் என்ற செய்தி பரவலாக கிண்ணியா  மக்களிடத்தில் உள்ளது.

M.H.கனி கிண்ணியா பிரதேச செயலராக  பதவி   வகித்த  குறுகிய காலத்துக்குள் கிண்ணியா பிரதேசத்திக்குள் அளப்பெரிய சேவை செய்துள்ளார். கிண்ணியாவில் மழை பெய்யும் பருவமழை  காலங்களில்   மக்களோடு மக்களாக இரவு  பகலாக வீதிகளில் நின்று நீர்  தேங்கி நிற்கும்  வீதிகளை வெட்டி நீரை ஓட விடுவது மற்றும் இயற்கை அனர்த்த நேரங்களில் மக்களோடு மக்களாக இரவு  பகலாக பணியாற்றுவது இவரது சிறப்பு  சேவையாம்!.

வருடாந்தம் சமூர்த்தி முத்திரை மீளாய்வு  செய்து  சமூர்த்தி முத்திரை தகுதி இல்லாதவர்களின் குடும்பங்களின் பெயர்களை நீக்கி  மாவட்ட  செயலகத்திக்கு  திருப்பி  அனுப்ப வேண்டும் .ஆனால்    முஹம்மது கனி அவர்களின் சேவைக்  காலத்திலில்  சமூர்த்தி முத்திரை தகுதி இல்லாதவர்களின் குடும்பங்களின் பெயர்களை நீக்கி தகுதியான புதியர்வர்களின்  குடும்பங்களின் பெயர்களை உள்வாங்கி அவரிய குடும்பங்களுக்கு வழங்கியுள்ளதாக இவரது சேவை பாராட்டுப்  பெறுகின்றது.

காணி உறுதி இல்லாதர்வகளுக்கு காணிக்  கச்சேரி நடாத்தி காணி உறுதி பெற்றுக் கொடுத்துள்ளார்.மற்றும்  பிறப்பு இறப்பு.திருமண பதிவுகள் செய்யாதர்வர்களுக்கு காலம் கடந்த  பதிவுகள் வழங்குவதர்ற்க்காக நடமாடும்  சேவைகள் மூலமாக  காலம் கடந்த  பதிவுகள் வழங்கியுள்ளார்.

முஹம்மது கனி  உள்ளூர்  சமுக வலைய  ஊடக நெருக்கம் கொண்டவர்!அதனால் இவரது செயல்பாடுகள் அடிக்கடி சமுக வலைய  தளங்களில் வலம் வந்தது  அதனால் உள்ளூர்  மழைக்  காளம்  அரசியல்வாதிகளுக்கு  வயிற்றரிச்சல்  வந்து விட்டது! 

மற்றும்  கிண்ணியா  அரசியல்வாதிகளுக்கும்  ஒரு பயம் வந்து விட்டது. எதிர்காலத்தில் முஹம்மது கனி   கிண்ணியாவில் இருந்து அரசியலில் குதித்து  விடுவாரோ  என்றொரு  அச்சம் வந்து விட்டது.

வயிற்றரிச்சல்  பயம் அச்சம்  ஆகியன  ஒன்றரக  சங்கமித்து கந்தளாய்  பெரும்பான்மை அரசியல்வாதி ஒருவர் முஹம்மது கனியை வெருகல் பிரதேச  செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இப்போது  வெருகலில் இருந்து .மீண்டும்  கிண்ணியாவிற்கு இடமாற்றம் செய்யபட்டுள்ளார்.

ஆனால் முஹம்மது கனி   கிண்ணியாவில்  தனக்கான  ஒரு இருப்பிடத்தை அமைத்து விட்டுச் சென்றுள்ளார்! என்றாவது  கிண்ணியாவில் M.H.கனி  என்றோ ஒரு நாள் அரசியலில்  குதிக்கும்  அளவுக்கு ஒரு முத்திரை பதித்து  விதைத்து சென்றுள்ளார் .இந்த விதைப்பு  ஒரு நாள்  முஹம்மது கனிக்கு  அரசியல் அறுவடை செய்யும் கனியாக  மாறக் கூடிய  நிலையை  அமைத்துள்ளார்!

காலங்கள் நேரங்கள் அமையும் போது  முஹம்மது கனி  நல்ல  வாய்ப்பை பயன்படுத்துவது  சாலச் சிறந்தது!..

(எம்.எம்.நிலாம்டீன்).

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here