தமிழ் சமூகத்துக்கு எச்சரிக்கை விடுத்த சரத் வீரசேகர! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில்! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 22, 2022

தமிழ் சமூகத்துக்கு எச்சரிக்கை விடுத்த சரத் வீரசேகர! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில்!

தமிழ் சமூகத்துக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவின் பேச்சை தாம் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நீண்ட போருக்கான காரணம்

இவ்வாறான பேச்சுக்களே கடந்த காலங்களில் இனக்குரோதங்களை ஏற்படுத்தி, நீண்ட போர் ஒன்றுக்கு வழியேற்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே, சரத் வீரசேகரவின் பேச்சு தமிழ் மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த மதத்தின் முதன்மை நாடான இலங்கையில் சிங்கள மக்களின் பொறுமைக்கு எல்லை இருப்பதாகவும், அதனை கேலிக்கு உட்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்திருந்தார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டமையை தாம் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகிளன் தலைவர் பிரபாகரனின் கட்சி என்று குறிப்பிட்ட அவர், கோணகல கிராமத்தில் 54 சிங்களவர்கள் கொல்லப்பட்ட போது, கொழும்பில் இந்து மத வேல் திருவிழா இடம்பெற்றதாகவும் அவர் கூறியிருந்தார்.  

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here