அவசரமாக இலங்கை வந்த இந்தியாவின் உயர்குழு! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 23, 2022

அவசரமாக இலங்கை வந்த இந்தியாவின் உயர்குழு!

 

இலங்கையின் பொருளாதாரம் குறித்து அவசர சந்திப்பை மேற்கொள்ளும் பொருட்டு இந்திய வெளியுறவு செயலாளர் விநே மொஹான் வட்ரா (Vinay Mohan Kwatra)தலைமையிலான குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.

இன்று காலை அவர்கள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடடாபய- ரணிலுடன் சந்திப்பு

இந்தக் குழுவினர் இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து உரையாடவுள்ளனர்.

இதன்போது இலங்கைக்கு அடுத்தகட்டமாக கிடைக்கப்போகும் இந்திய நிதியுதவிகள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இலங்கையின் புதுடில்லி உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை கடந்த வாரம், சந்தித்ததன் பின்னரே இந்த அதிகாரிகள் மட்ட பயணம் நிகழ்கிறது.  

இந்திய வெளியுறவு செயலரின் சிறிலங்கா விஜயம்-  தொடர்பில் நாமல் பரபரப்பு கருத்து!

இந்திய நாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிடுவதற்காகவே இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா(Harsh Vardhan Shringla) சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

மாறாக குறைகளை கண்டறிய அவர் சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவில்லை என, விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச(Namal Rajabaksha) ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், 

எமது அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்படுகிறது. ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அனைத்து நாடுகளுடனும் ஒன்றினைந்து செயற்படுகிறோம். இந்தியா சிறிலங்காவிற்கு அயல்நாடு, இரு நாட்டுக்குமிடையில் வரலாற்று ரீதியில் நல்லுறவு காணப்படுகிறது.

சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் மத அடிப்படையில் நல்லுறவு காணப்படுகிறது. இந்தியாவின் ஒத்துழைப்புடன் சிறிலங்காவில் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தி பணிகள் காணப்படுகின்றன. அவற்றை இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பார்வையிடுவார்.

பல நாடுகளை சேர்ந்தோர் தற்போது சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ளார்கள். இதன் போது கிசுக்கிசுக்களை தேடி அலைபவர்களும் உள்ளனர். ஆகவே இவ்வாறான காரணத்திற்காக இவர் நாட்டுக்கு வரவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை பலப்படுத்தும்வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரது வருகை காணப்படுகிறது.




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here