கடன் வசதிக்கான வாக்குறுதியை வழங்காத இந்தியா:உணவு மற்றும் எரிபொருளை பெறுவதில் சிக்கல்! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 25, 2022

கடன் வசதிக்கான வாக்குறுதியை வழங்காத இந்தியா:உணவு மற்றும் எரிபொருளை பெறுவதில் சிக்கல்!

எரிபொருள் மற்றும் அத்தியவசிய உணவு பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக கடன் வசதிகளை வழங்குவது தொடர்பில் வாக்குறுதியளிப்பதில்லை என இந்திய பிரதிநிதிகள், இலங்கை அரசுக்கு அறிவித்துள்ளனர்.

இந்தியாவின் விசேட பிரதிநிதிகள் குழு, இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கடந்த வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியது.

கடனை திரும்ப பெறுவது தொடர்பில் கவனம் செலுத்திய இந்திய பிரதிநிதிகள்

இதன் போது அத்தியவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியாவின் கடன் வசதியின் கீழ் ஆயிரம் மில்லியன் டொலர்களையும் எரிபொருளை இறக்குமதி செய்ய 500 மில்லியன் டொலர்களையும் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் இந்திய பிரதிநிதிகள், கடன் வசதிகளை வழங்குவதை விட வழங்கிய கடனை திரும்ப பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தியுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு கடன் வழங்குவது தொடர்பில் இந்திய நிதிச் சபை வரையறை விதித்திருப்பது மற்றும் கடன் வழங்கும் வரையறையை மீறி கடன் வழங்கி இருப்பது என்பன இதற்கு காரணம்.

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து இந்திய பிரதிநிதிகள் குழுவினர் இந்திய அரசுக்கு அறிக்கை ஒன்றை வழங்க உள்ளனர்.

மின்சார சபையின் முன்னாள் தலைவரின் கருத்தால் அதிருப்தியில் இந்தியா 


எவ்வாறாயினும் இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் கோப் குழுவில் வெளியிட்ட தகவல் காரணமாக ஏற்பட்டுள்ள அதிருப்தியால் இந்தியா கடன் வசதிகளை வழங்கும் உறுதிமொழியை வழங்கவில்லை என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் வியாழக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் அவர் இந்த விடயங்களை உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் இந்திய பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து வெளியிட்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பேச்சுவார்த்தை மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். இதற்கு முன்னர் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் தலையீட்டின் அடிப்படையில் இந்தியா கடன் வசதிகளை வழங்கியது. 




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here