இலங்கை அக்கரைபற்று பெண்ணை தேடி வந்த இந்திய பெண்:மனநல மருத்துவரிடம் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிமன்றம் - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, June 27, 2022

இலங்கை அக்கரைபற்று பெண்ணை தேடி வந்த இந்திய பெண்:மனநல மருத்துவரிடம் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிமன்றம்

சமூக வலைத்தளம் ஊடாக இரண்டு வருடங்களுக்கு மேல் காதல் தொடர்பில் இருந்து வந்த இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று அக்கரைப்பற்று பிரதேசத்தில் நடந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களை மனநல மருத்துவரிடம் அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த பெண்களில் ஒருவர் இலங்கையர் என்பதுடன் மற்றைய பெண் இந்தியாவை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த பெண்

தமிழகத்தில் இருக்கும் இந்திய பெண், தனது காதலியை தமிழகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த போதிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள பணி சுமை காரணமாக இலங்கை பெண்ணுக்கு உடனடியாக கடவுச்சீட்டை பெற முடியவில்லை.

இதனால், இந்திய பெண் சுற்றுலா விசாவில் கடந்த 20 ஆம் திகதி இலங்கை வந்து, அக்கரைப்பற்றுக்கு சென்று இலங்கை பெண்ணின் இரவு தங்கி இருந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை பெண் திருமணம் முடிந்து ஒரு ஆண் பிள்ளையும் உள்ளது. இந்த பெண்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் தொடர்பை எதிர்த்துள்ள பெண்ணின் தந்தை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் இரண்டு பெண்களையும் கைது செய்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இந்த பெண்களை மனநல மருத்துவரிடம் அனுப்பி நாளைய தினம் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம்.ஹம்சா, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பெண்கள் மனநல பரிசோதனைக்காக கல்முனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இலங்கையின் ஓரின சேர்கையாளர்கள், திருநங்கைகள் உள்ளட்ட தரப்பினர் நேற்று முன்தினம் காலிமுகத்திடலில் பேரணி ஒன்றை நடத்தி இருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here