காதலித்த தோழிகளை சேர்த்து வைத்த நீதிமன்றம்! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 1, 2022

காதலித்த தோழிகளை சேர்த்து வைத்த நீதிமன்றம்!

 ஓரினச் சேர்க்கை காதலர்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழக் இந்தியாவின் கேரள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கேரளா மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்த ஆதிலா மற்றும் , கோழிக்கோட்டைச் சேர்ந்த பாத்திமா நூரா ஆகியோரின் குடும்பத்தினர் நட்பாகப் பழகி வந்துள்ளனர்.

இதையடுத்து தோழிகள் இருவரும் சவூதி அரேபியாவில் ஒன்றாகப் படிக்கச் சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இது பற்றி அறிந்த இருவரது குடும்பமும் அவர்களைப் பிரித்துவைத்த நிலையில் பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியே தொண்டு நிறுவனம் ஒன்றில் தஞ்சம் அடைந்தனர்.

அப்போது அங்கு வந்த பாத்திமாவின் உறவினர்கள் அவரை கடத்தி சென்றதை அடுத்து, ஆதிலா அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து ஆதிலா கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆதிலா நஸ்ரினும், பாத்திமா நூராவும் சேர்ந்து வாழலாம் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here