சர்ச்சைக்குள்ளாகும் பொது மன்னிப்பு விவகாரம் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப் போகும் குழு! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 1, 2022

சர்ச்சைக்குள்ளாகும் பொது மன்னிப்பு விவகாரம் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப் போகும் குழு!

 

அரசியலமைப்பினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் தொடர்பில் சர்ச்சைக்குரிய விடயங்கள் தற்போது காணப்படுகிறது ஆகவே பொது மன்னிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க விசேட ஆலோசனை சபை ஸ்தாபிக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா  தெரிவித்துள்ளார்.  

சுதந்திரக் கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

திருத்த யோசனைகள் முன்வைப்பு

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்ட மூலவரைபு தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நீதியமைச்சரிடம் பல திருத்த யோசனைகளை முன்வைத்துள்ளது.

நாணய சபையின் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவையின் செயலாளர்கள் ஆகியோர் அரசியலமைப்பு சபை ஊடாக நியமிக்கப்பட வேண்டும்.

அத்துடன் அரசியலமைப்பு சபை முறையான விடயதானங்களுக்கு அமைய செயற்படும் வகையில் திருத்தங்கள் கொண்டு வருதல் அவசியமாகும்.

ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க விசேட குழு

முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை வகித்தல் அவசியமாகும்.

பாதுகாப்பு அமைச்சினை தவிர்த்து ஜனாதிபதி ஏனைய அமைச்சுகளை வகிக்க கூடாது என்ற வரையறை 21ஆவது திருத்தத்தில் உள்வாங்கப்பட வேண்டும்.

அரசியலமைப்பினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் தொடர்பில் சர்ச்சைக்குரிய விடயங்கள் தற்போது காணப்படுகிறது ஆகவே பொது மன்னிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க விசேட ஆலோசனை சபை ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

அமைச்சின் செயலாளர்கள் 

பொது நிர்வாக சேவைக்கு அப்பாற்பட்ட வகையில் அமைச்சின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டதால் முழு அரச செயலொழுங்கும் சீரழிந்துள்ளது.

இனிவரும் காலங்களில் அமைச்சின் செயலாளர்கள் பொது நிர்வாக சேவைத்துறையில் இருந்து துறைசார் அடிப்படையில் நியமிக்கப்படுதல் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றார் என குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here