துரத்த வந்தவர் ஜனாதிபதியாகவும், துரத்தப்பட்டவர் பிரதமராகவும் இருக்கும் நிலை: அநுரகுமார காட்டம்! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, May 22, 2022

துரத்த வந்தவர் ஜனாதிபதியாகவும், துரத்தப்பட்டவர் பிரதமராகவும் இருக்கும் நிலை: அநுரகுமார காட்டம்!

 

துரத்த வந்தவர் ஜனாதிபதியாகவும், துரத்தப்பட்டவர் பிரதமராகவும் இருக்கும் நிலை இன்று உருவாகியுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நுவரெலியா - சினிசிட்டா மண்டபத்தில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ரணிலும், கோட்டாபயவும் ஒரே அணியாக இருப்பது வெளியில் நன்றாகத் தென்படுகின்றது. ஒருவரை ஒருவர் காப்பாற்றும் செயற்பாடு இதற்குச் சான்று. மகிந்த ராஜபக்ச அன்று மக்களின் பணத்தைக் களவாடியதாலேயே 2015 இல் அவரை தோற்கடித்து மைத்திரி - ரணில் ஆட்சிக்கு மக்கள் வாக்களித்தனர்.

இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையைத் தீர்க்க தற்போது வெளிநாடுகளில் கடன் வாங்குகின்றனர். அடுத்த வருடத்தில் அவற்றை மீளச் செலுத்த வேண்டும் இப்படி சென்றால் நெருக்கடியிலிருந்து மீள முடியுமா? தற்போதைய நெருக்கடிக்கு ரணில் தீர்வை வழங்கப் போவதில்லை.

அவர் நாட்டின் சொத்துகளை விற்பதற்குக் கைதேர்ந்தவர். ஆகவே தற்போதைய நிலையில் எவருக்கும் அரசியலில் தெளிவில்லை. துரத்த வந்தவர் ஜனாதிபதியாகவும் துரத்தப்பட்டவர் பிரதமராகவும் இருக்கும் நிலை இன்று உருவாகியுள்ளது.

ஆகவே வழமைபோன்று ஒருவரை ஒருவர் காப்பாற்றுவதே நடக்கும். கோட்டாபயவை வீட்டுக்குச் செல்லுமாறு கூறிய ஹரீன், மனுச ஆகியோர் தற்போது அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளனர். இதை எவருக்கும் விளங்கிக் கொள்வது கடினம் அல்ல.

ஆகவே எமது நாட்டின் போக்கு இப்படிதான். ஆகவே உருவங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர கொள்கைகளில் மாற்றம் ஏற்படவில்லை. இப்போது பழக்கப்பட்ட அரசியல் இயந்திரமே இயக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here