மின் தடை குறித்து வெளியான மகிழ்ச்சித் தகவல்! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 18, 2022

மின் தடை குறித்து வெளியான மகிழ்ச்சித் தகவல்!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, தற்போது அமுலாக்கப்படும் மின் தடை நேரத்தை எதிர்காலத்தில் குறைக்க முடியும் என மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மழையுடனான காலநிலையால், நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்டியுள்ள நீர்த்தேக்கங்களில், நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவு உயர்வடைந்துள்ளது,

நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம், தற்போது 50 சதவீதமளவில் உயர்வடைந்துள்ளதாக மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரண தெரிவித்துள்ளார்.

நீர்மின் உற்பத்தி மூலம் கடந்த வாரம் 210 ஜிகாவொட் மின்சாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் அதிகரித்தால், மின்னுற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும் என மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதுப்பிக்கப்பட்ட சக்தியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்து சுமார் 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அந்தப் பணிகள் தொடர்பில் தம்மால் திருப்தியடைய முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் இன்றைய தினமும், 3 மணித்தியாலமும், 40 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படுமெ அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here