பிக்குகள் அரசியலில் வேண்டாம்: அவர்களை அனுப்பிவிடுங்கள்! சபையில் மனோ கணேசன் ஆவேசம்! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 18, 2022

பிக்குகள் அரசியலில் வேண்டாம்: அவர்களை அனுப்பிவிடுங்கள்! சபையில் மனோ கணேசன் ஆவேசம்!

 

இந்த ஆமதுருக்கள் அரசியலில் வேண்டாம். கைகூப்பி கோருகிறேன். இவர்கள்தான் இத்தனைக்கும் காரணம்.சும்மா இந்த வன்முறைகளைப் பற்றி, இந்த பக்கமும், அந்த பக்கமும் மாறி, மாறி குற்றம் சாட்டுவதில் பயனில்லை. அனைத்துக்கும் மூல காரணம் இந்த ஆமதுருகள்தான். இவர்களை பன்சலைக்கு அனுப்புங்கள். அரசியலில் இவர்கள் வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சபையில் இன்று ஆளும் கட்சி எம்பிகளின் மீது கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே சிங்கள மொழியில் ஆவேசமாக இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இன்றைய தினங்களில், 2009 ஆண்டில் தமிழ் மக்கள், நூறு, ஆயிர, இலட்சக்கணக்கில், கொல்லப்பட்டார்கள். கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்களில் கொல்லப்பட்டார்கள்.

இன்று ஆளும் அணி அமைச்சர்களின் வீடு, சொத்துகளை எரித்து கொலை செய்த இந்த வன்முறை, அமரகீர்த்தி என்ற அப்பாவி எம்பியை அடித்தே கொலை செய்த வன்முறைகள், இந்த யுத்தம் மற்றும் 1983, 1977, 1958 இனக்கலவரங்களிலேயே ஆரம்பித்தது. இந்த தீவைப்பு தமிழர்களாகிய எங்களுக்குப் புதிதல்ல. 1983 எங்கள் ஹவ்லக் வீதி வீட்டைக் கொளுத்தினார்கள்.

எங்கள் புறக்கோட்டை வியாபார நிலையத்தைக் கொளுத்தினார்கள். ஒரு கம்பீரமான திரைப்பட கலைஞரான என் தந்தை அதன்பின் மனமுடைந்து சில காலம் வாழ்ந்து இறந்து போனார். இதோ இந்த ஆசனத்தில்தான் என் நண்பன் ரவிராஜ் அமர்ந்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here