கடனை திருப்பிச் செலுத்தும் அனைத்துத் திறனையும் இலங்கை இழந்துவிட்டது - மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, April 13, 2022

கடனை திருப்பிச் செலுத்தும் அனைத்துத் திறனையும் இலங்கை இழந்துவிட்டது - மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!

கடனை திருப்பிச் செலுத்தும் அனைத்துத் திறனையும் இலங்கை இழந்து விட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க  தெரிவித்தார்.

அறிவிக்காமல் கடன்களை செலுத்தாமல் இருப்பது ஒரு நாட்டின் மிக மோசமான நிலைமைக்கு வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், 

வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு நாம் வந்துவிட்டோம். நாட்டில் பெட்ரோல், டீசல், மருந்துகள், பால்மா மற்றும் வெளிநாட்டு உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய வரையறுக்கப்பட்ட அந்நியச் செலாவணிப் பங்கை கடனை செலுத்தப் பயன்படுத்தினால், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டைக் குறைப்பது கடினமாகிவிடும்."

இந்தத் தருணத்தில் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதே சிறந்த நடவடிக்கை என்று நாணயச் சபையும் இலங்கை மத்திய வங்கியும் அரசாங்கத்திற்குப் பரிந்துரைத்துள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here