நிறுத்துங்க! முஸ்லீம்களை நிம்மதியா வாழ விடுங்கள்! கொதித்த எடியூரப்பா! பாஜகவிலிருந்து முதல் எதிர்ப்பு! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, April 12, 2022

நிறுத்துங்க! முஸ்லீம்களை நிம்மதியா வாழ விடுங்கள்! கொதித்த எடியூரப்பா! பாஜகவிலிருந்து முதல் எதிர்ப்பு!

 

பெங்களூர்: இஸ்லாமியர்களை வாழ விடுங்கள். அவர்களை நிம்மதியாகவும், மரியாதையுடனும் வாழ விடுங்கள் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான வெறுப்பு பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. அங்கு ஹிஜாப் தடை ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளில் அமலுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் அங்கு இஸ்லாமிய கடைகளில் பொருட்கள் வாங்க கூடாது என்று பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் போராட்டம் செய்து வருகின்றன.அதேபோல் ஹலால் உணவுகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் கடுமையான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

இஸ்லாமியர் பிரச்சாரம்

இஸ்லாமியர்களை பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிப்படைய செய்யும் வகையில் இந்த பிரச்சாரங்கள் திட்டமிடப்பட்டு நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது போக இஸ்லாமியர்கள் ஓட்டும் கார்கள், வாகனங்களில் ஏற கூடாது. அவர்களை இந்துக்கள் பணிக்கு அமர்த்த கூடாது என்றும் இந்துத்துவா அமைப்புகள் மிக மோசமான பிரச்சாரத்தில் இறங்கி உள்ளது. முக்கியமாக ஸ்ரீ ராம சேனா என்ற அமைப்பு இஸ்லாமியர்களுக்கு எதிராக பல்வேறு இடங்களில் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது

வன்முறைகள்

இந்த நிலையில்தான் தற்போது கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான எடியூரப்பா இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த வெறுப்பு பிரச்சாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், இஸ்லாமியர்களை வாழ விடுங்கள். அவர்களை நிம்மதியாகவும், மரியாதையுடனும் வாழ விடுங்கள். இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதே என் நோக்கம்.

தாய் பிள்ளை

அவர்கள் ஒரு தாய் பிள்ளையாக ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. இதை யார் விரும்பவில்லையோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதை முதல்வர் பஸ்வராஜ் பொம்மையும் உறுதிப்படுத்தி இருக்கிறார். பொம்மை சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். மாநிலத்தில் அமைதியை குலைக்கும் வகையில் சம்பவங்கள் நடத்த கூடாது.

அமைதி

இனி வரும் நாட்களில் கர்நாடகாவில்  விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்க கூடாது. நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். விரும்பத்தகாத சம்பவங்கள் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை நிறுத்துமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரங்களை எதிர்த்த பாஜகவை சேர்ந்த ஒரே பெரிய தலைவர் எடியூரப்பா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here