ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய மறுத்ததால், பஹ்ரைனில் உள்ள இந்திய உணவகம் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது.
பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் அட்லியா பகுதியில் அமைந்துள்ள பஹ்ரைன் லான்டர்ன்ஸ் - இந்திய உணவகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, உணவகம் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் முறையாக மன்னிப்பு கேட்டுள்ளது.
35 வருடங்களாக சேவையில் இருக்கும் உணவகம், மேலாளர் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய மேலாளர் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வ கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் அணிந்த பெண் ஒருவரை உணவக ஊழியர்கள் இடைமறிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
No comments:
Post a Comment