அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்க தடை விதித்துள்ளார் மாநகர மேயர் ஸக்கிய அதாவுல்லாஹ்! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, March 30, 2022

அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்க தடை விதித்துள்ளார் மாநகர மேயர் ஸக்கிய அதாவுல்லாஹ்!

 


1100 ரூபாவுக்கு  தனி இறைச்சியும்  1000  ரூபாவுக்கு  முள்ளுடன் இறைச்சியும் விற்க  வேண்டும் என்றும் இந்த  விலைக்கு இறைச்சி விற்க வேண்டும் இன்றும் விலைக்கு இறைச்சி விற்க முடியாத இறைச்சிக் கடை உரிமையார்கள் தங்கள் கடைகளை மூடலாம் என்றும் மாநகர மேயர் உத்தரவு  பிறப்பித்துள்ளார்.  அதன் பிரகாரம்  அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் சகல மாட்டிறைச்சி கடைகளும் மூடப்பட்டுள்ளது.அதனால் அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் பொது மக்கள் மாநகர மேயரின்  இந்த  நடவடிக்கை காரணமாக  மகிழ்ச்சி தெரிவித்ள்ளனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட எல்லைக்குள் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை!

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட மாட்டு இறைச்சி கடைகளில் சரியான நிர்ணய விலையை அட்டாளைச்சேனை பிரதேச சபை அறிவிக்கவில்லை.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மாட்டு இறைச்சி கடை உரிமையாளர்கள் தாங்கள் நினைத்த விலைக்கு இறைச்சியை விற்பனை செய்கின்றார்கள்

எந்தவொரு விலை பட்டியலும் காட்சிப்படுத்தாமல் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு விலை விற்கிறார்கள்…

அதிக முள் எடையுடன் இறைச்சியினை கலந்து 1200 ரூபா விலைக்கு விற்கிறார்கள்…தனி இறைச்சி 1400 ரூபா அதிக விலைக்கு விற்கின்றார்கள்…

மக்கள் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் முறையிட்டாலும் அட்டாளைச்சேனை பிரதேச சபை   எவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை!

ஒரு நாள் கூலி வேலை செய்யும்  தொழிலாளி 1500 ரூபாய் பணத்தில் 1,400 ரூபாய்க்கு இறைச்சி வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றார்கள்..

வாங்கும் இறைச்சியிலும் அதிகம் கொழுப்பும் எலும்பும், கழிவுகளும் தான் அதிகம் இருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்..

கொடுக்கப்படுகின்ற பணத்துக்கு தராசில் எவ்வளவு இறைச்சி நிறுக்கப்படுகிறது என்பது கூட மக்களுக்கு அறிய முடியாமல் தாராசு  மறைக்கபட்டு  வைக்கப்பட்டுள்ளது

மக்களுக்கு நிறுவை  விளங்கும் வகையில் தராசுவைக்கும் வகையில் பிரதேச சபை அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் அதனை அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என்ற  ஆதங்கம் மக்களிடத்தில் எழுந்துள்ளது!

 இதுதொடர்பாக அட்டாளைச்சேனையின் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் தலையிட்டு மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் இதுவே மக்களின் வேண்டுகோள்..

 இதேவேளை அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் அதிக விலைக்கு  மாட்டிறைச்சி விற்க தடை விதித்துள்ளதால் அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள்  வசிக்கும் பெருமளவு மக்கள் 3 கிலோ மீட்டர் தூரம் கடந்து பக்கத்து ஊரான அட்டாளைச்சேனைக்கு சென்று மாட்டிறைச்சி கொள்வனவு செய்து வருகின்றார்கள்!

அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள்  வசிக்கும் பெருமளவு மக்கள் 3 கிலோ மீட்டர் தூரம் கடந்து பக்கத்து ஊரான அட்டாளைச்சேனைக்கு சென்று அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள்  வசிக்கும் பெருமளவு மக்கள் இறைச்சி  கொள்வனவு  செய்து வருவது குறித்து அட்டாளைச்சேனையின் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் மீது மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றார்கள்.

காரணம்  அக்கரைப்பற்று மாநகர மேயர்  கொண்டு வந்துள்ள தடைக்கு  அட்டாளைச்சேனையின் பிரதேச சபை  முழு  ஆதரவு  வழங்கி  அட்டாளைச்சேனையின் பிரதேச சபையின் எல்லைக்குள்  அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்க வேண்டாம் என்ற தடையை கொண்டு வந்திருந்தால் மக்களுக்கு  குறைந்த  விலையில் மாட்டிறைச்சி கிடைத்திருக்கும் என்ற ஆதங்கம் நிறைந்துள்ளது !

விலை  நிர்ணயம்  இல்லாது தன்னிச்சையாக அக்கரைப்பற்று மாநகர சபையின் தீர்மானத்திற்கு கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக அட்டாளைச்சேனையின் பிரதேச சபையின் எல்லைக்குள் மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்களை 1400 ரூபாவுக்கு விற்க விட்டுள்ளதானது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் விசனம் கொண்டுள்ளனர்.

 எம்.எம்.நிலாம்டீன்-


 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here