முஸ்லிம்களின் ஆதரவின்றி தேர்தலை வெல்லமுடியாது - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 13, 2017

முஸ்லிம்களின் ஆதரவின்றி தேர்தலை வெல்லமுடியாது


Image result for basil rajapaksa

முன்னாள் அமைச்சர் பஷில்


முஸ்­லிம்­களின் ஆத­ரவு இன்றி எக்­கா­ரணம் கொண்டும் எதிர்­வரும் தேர்­தல்­களை வெற்­றி­கொள்ள முடி­யாது இதனை நாம் உணர்ந்தி­ருக்­கின்றோம்.


பொது ஜன பெர­முன கட்சி முஸ்­லிம்­களை அர­வ­ணைத்துச் செல்லும். முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை இனங்­கண்டு அவற்றைத் தீர்ப்­ப­தற்­கான திட்­டங்­களை வகுப்­ப­தற்­கா­கவே முஸ்லிம் முற்­போக்கு முன்­னணி அமைக்­கப்­பட்­டுள்­ளது என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார். 


பத்­த­ர­முல்லை நெலும் மாவத்­தையில் உள்ள பொது­ஜன பெர­மு­னவின் காரி­யா­ல­யத்தில் கடந்த வியாழன் மாலை நடை­பெற்ற கூட்­ட­மொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இக்­கூட்­டத்தில் வடக்கு கிழக்கு உட்­பட நாட்டின் ஏனைய மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் மஹிந்த தரப்பு ஆத­ர­வா­ளர்கள் பெரு­ம­ளவில் கலந்து கொண்­டனர்.

கூட்­டத்தில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது. எதிர்­கா­லத்தில் நாம் அமைக்­க­வி­ருக்கும் ஆட்­சியில் முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் முக்­கி­ய­மாகக் கவ­னத்திற் கொள்­ளப்­படும். முஸ்­லிம்­களின் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளையும் தீர்த்து வைப்­ப­தற்கு இப்­போதே திட்­டங்கள் வகுக்­கப்­பட்டு விட்­டன. உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்கு முன்பு மாகாண சபை தேர்தல் நடாத்­தப்­படும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மாகாண சபைத் தேர்தல் குறிப்­பிட்ட காலத்தில் காலம் தாழ்த்­தப்­ப­டாது நடத்­தப்­பட வேண்­டு­மென அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களை பிர­யோ­கித்து வரு­கின்றோம்.

புதிய உள்­ளூ­ராட்சித் தேர்தல் முறையை இன்று சிறு­பான்மைக் கட்­சிகள், சிறு­கட்­சிகள் எதிர்க்­கின்­றன. என்­றாலும் அமைச்சர் அதா­வுல்­லாஹ்வே இந்தச் சட்ட மூலத்தை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து அங்­கீ­காரம் பெற்றுக் கொண்டார்.

அப்­போது சிறு­பான்மைக் கட்­சிகள் இந்தச் சட்­ட­மூ­லத்­துக்கு ஆத­ரவு நல்­கின. ஆனால் இப்­போது அதனை எதிர்க்­கின்­றன.

அர­சியலில் பெண் பிர­தி­நி­தித்­து­வத்தை அன்று நாம் சட்­டத்­திற்குள் உள்­வாங்கிக் கொள்­ள­வில்லை ஏனென்றால் முஸ்லிம் பெண்கள் அர­சி­யலில் ஈடுப்­ப­டு­வதை விரும்ப மாட்­டார்கள் என்ற கார­ணத்­தி­னா­லேயே அன்று சட்­டத்­திற்குள் உள்வாங்கப்படவில்லை
முஸ்லிம்கள் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் கீழ் அணிதிரள வேண்டும்.

இந்த அமைப்பின் ஆலோசனைப்படியே முஸ்லிம்கள் தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

Post Top Ad

Responsive Ads Here