“நந்திக்கடலுக்கான பாதை” என்னும் நூலினை தமிழ் கடும் போக்குவாதிகள் வெளிநாடுகளுக்கு விநியோகம் செய்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேஜர் ஜெனரல் கமால் குணரட்னத்தின் நந்திக்கடலுக்கான பாதை என்னும் நூலின் ஊடாக இராணுவத்தை காட்டிக் கொடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.
இராணுவத்தினர் குற்றம் செய்யவில்லை என நாம் உலகம் முழுவதிலும் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றோம்.
குறித்த நூலில் படையினர் குற்றம் இழைத்துள்ளதாக ஒப்புக் கொள்ளும் ஆதரங்களும், பல தகவல்களும் உள்ளடங்கியிருக்கின்றது.
இது மறுக்கப்படவேண்டிய ஒன்று, இதனை தற்போது தமிழ் கடும்போக்காளர்கள் பல இடங்களில் கூறிவரும் குற்றச்சாட்டுக்களை உண்மையாக்கும் வகையில் காணப்படுகின்றது.
இந்த நூலானது அண்மைய வரலாற்றில் இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கும் மிகவும் மோசமான ஆவணமாக உள்ளது.
மேலும் இந்த நூலினை வைத்து தமிழ் கடும்போக்குவாதிகள் வெளிநாடுகளுக்கு விநியோகம் செய்து வருவதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியுள்ளார்.
இராணுவ வீரர்களை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ள நந்திக்கடலுக்கான பாதை
ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட“நந்திக்கடலுக்கான பாதை” என்ற புத்தகம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீர குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
குறித்த புத்தகம் இராணுவ வீரர்கள் போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டமையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
படை வீரர்கள் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினார்கள் என புத்தகத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் விசாரணைமுன்னெடுக்குமாறு சர்வதேச சமூகங்கள் அழுத்தம் பிரயோகித்து வருகின்றது.
நாட்டின் நீதித் துறை பொறிமுறை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு நல்லாட்சிஅரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்து வருவதாகவும் மங்கள கூறியுள்ளார்.
-- எம்.எம்.நிலாம்டீன்---