பொத்துவில் பிரதேச சபைக்கு இர்பான் ஏன் பதில் செயலாளராக நியமிக்கபட்டார் ? அதன் பின்னணி என்ன ? - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, March 8, 2017

பொத்துவில் பிரதேச சபைக்கு இர்பான் ஏன் பதில் செயலாளராக நியமிக்கபட்டார் ? அதன் பின்னணி என்ன ?


                                     
(L.M.இர்பான்)

பிரேதேச சபை செயலாளர்கள் என்பவர்கள்  எழுதுவினைஜர் சேவையில் சுப்பரா  சேவை பரீட்சையில் சிதியடைந்தவராக இருத்தல் வேண்டும்.அதற்கான பரீட்சை என்பது பொதுநிர்வாக  அமைச்சினளால் 5  வருடகளுக்கு ஒரு முறை எழுதுவினைஜர் சேவையில் 5 வருடங்கள் பூர்தியடைந்தவர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் கோருவது  வழமை .தற்போது விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளதன.வருட நடுப் பகுதியில்  பரீட்சை  நடைபெறலாம்.
இந்த  சுப்பரா  சேவையாளர்கள்  நாட்டில் மிகவும்  தட்டுப்பாடு கொண்ட பதவியாகும்.இப்போது  இந்த சுப்பரா   சேவையாளர்கள் என்பது  அம்பாரை  மாவட்டத்தில் மிகவும்  தட்டுப்பாடு கொண்டது.

அதனால் சுப்பரா சேவையாளர்கள்  இல்லாத போது எழுதுவினைஜர்  சேவையில் முதலாம் தரத்தில் உள்ளவர்களை  பதில் கடமையாக DS  செயலகம்  பிரதேசே  சபை  மற்றும்  ZD  அலுவலகங்களில்  AO மற்றும்  பிரதேச மற்றும் நகர சபை காரியாலயங்களில் செயலாளராக  நியமிப்பது  வழமை அந்த  வகையில்தான்  அட்டாளைச்சேனை பிரதேச  செயலகம்  மற்றும் DS செயலகங்களில்.பதில்  கடமை  கொண்ட  2  அதிகாரிகள் உள்ளார்கள்.

இந்த  இர்பான் என்பவர் கல்வித் திணைக்களத்தில் இருந்து பொத்துவில் பிரதேச  சபை  செயலாளராகவும் அட்டாளைச்சேனை பதில் செயலாளராகவும் கடையாற்றி வந்தார் .கடந்த  3  மாதங்களாக இர்பான் அட்டாளைச்சேனை சபைக்கு  நிரந்தர  செயலாளராக நியமனம்  பெறுவதற்காக உயர் மட்டம்  கொண்டு உள்ளூர்  அரசியல்வாதிகள்  முதல்  திருகோணமலை உயர்  அதிகாரிகள்  வரை  பேரும் பிரயத்தனம் செய்தார் .ஆனால்  இவர் மீது  பலவகையான  குளறுபடிகள் முறைகேடுகள்  குறித்து முறைப்பாடுகள்  குவிந்து கொண்டே இருந்தன.

இந்த நிலையில்தான் கடந்த  மாதம்  திருமலையில்  இருந்து  முதலைமைச்சரின்   கீழ்  இயங்கும்  உள்ளூராட்சி அமைச்சின் செயலர் .ஆணையர்  மற்றும் உயர்  மட்ட  விசாரணை  குழுவொன்று நேரடியாக  அட்டாளைச்சேனை  பிரதேச  சபைக்கு  விஜயம்  செய்து  விசாரணையில் இறங்கினார்கள்.

ஆனால்  அட்டாளைச்சேனைக்கு  இவர் வேண்டாம்  என்று  ஆளுநர் முதலைமைச்சர் வரை அட்டாளைச்சேனையில் இருந்து பொது மக்கள் மற்றும் பொது  அமைப்புக்கள் தொடர்ச்சியாக முறைகேடுகள் குறித்து  முறைப்பாடுகள் செய்து வந்தன.

அத்துடன் பொத்துவில் பிரதேசத்தில் இருந்து ஏராளமான முறைகேடுகள் பாதை புனரைமைப்பு  விடயத்தில் குளறுபடிகள் குறித்து ஆளுநர் .CM  மற்றும்  திருமலை உயர் அதிகாரிகளுக்கு நாளாந்தம் முறைப்பாடுகள் வந்து கொண்டே  இருந்தனர்.இதே நேரம் கிழக்கு மாகாண  எதிர்கட்சி  தலைவர்  உதுமாலப்பை இந்த விடயத்தை  சபையில்  கிளப்ப திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் இந்த இர்பானை  இறக்காமத்திக்கு நிரந்தரமாக  அனுப்பும்  திட்டம் ஒன்று  திருமலை  முதலமைச்சர்  காரியாலத்தில் முன்வைக்கபட்டது.இந்த திட்டத்தை அறிந்து கொண்ட இறக்காமம்  உள்ளூர் அரசியல்வாதி  ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதேவேளை முக்கியமான துறையில்  உள்ள இர்பானின்  உறவுக்காரர்  ஒருவர்  திருமலை உயர் அதிகாரிகள் ஊடாக இறக்காமம் இடமாற்ற  திட்டத்தை  இரத்து செய்து அட்டாளைச்சேனைக்கு  நிரந்தரமாக்கும்  நகர்வு ஒன்றை செய்து கொண்டிருந்தார்.அத்துடன் அட்டாளைச்சேனை  பிரதேச சபையில்  தற்போதும்  இருக்கும்  அட்டாளைச்சேனை  முஸ்லிம்  காங்கிரஸ்  உத்தியோகஸ்தர்  ஒருவர்  அம்பாறை  முஸ்லிம் பிரதியமைச்சர்  ஒருவர்  ஊடாக  முதலமைச்சரை  நெருங்கி இந்த இர்பானை  அழைத்துக்கொண்டு திருமலையில்  முகாமிட்டு அட்டாளைச்சேனைக்கு  நிரந்தரமாக்கும்  ஒரு நகர்வில் இறங்கினார்.  ஆக  இர்பான்  இரண்டு  பக்கமாக மேலும்  மேலும்  பெரும்  முயற்சி  செய்து கொண்டிருந்தார்..

இந்த  நிலையில்  அட்டாளைச்சேனை  சபையில்  தற்போதும்  கடையாற்றும்  ஒருவரை செயலராக  நியமிக்கலாம்  என்று  ஒரு  உயர் அதிகாரி ஒரு  தீர்மானம்  எடுத்தார் .அந்த தீர்மானத்திக்கு  மாகாண  சுகாதார  அமைச்சர்  நசீரும்  ஓகே  சொன்னார் .ஆனால்  அடுத்த  நாள் அந்த உயர் அதிகாரி அடித்தார் அந்தர்பல்டி.அந்த அட்டாளைச்சேனை  உதியோகஸ்தருக்கு வழங்கிய  ஆதரவை  இழுத்தடித்தார்.அத்துடன்  அந்த  அட்டாளைச்சேனை உதியோகஸ்தர்  முஸ்லிம்  காங்கிரஸ்  எதிரணிக்காரர் என்ற ஒரு  தகவலும் உள்ளது.ஆனால் அந்த  அட்டாளைச்சேனைக்காரர்  அமைச்சர்  நசீர்தான்  தனக்கு  ஆப்படித்தார்  என்று  நினைத்துக்கொண்டுள்ளார். பாவம்  அவருக்கு  விடயம் தெரியாது .  இந்த  நிலையில்தான் தற்போதைய  பதில் செயலர்  பாயிஸ்  என்பவரை  அவரது  இரண்டு  உறவுக்காரர்கள் அமைச்சர்  நசீருக்கு  சிபார்சு  செய்தார்கள்.

ஆக  இந்த விடயத்தில்  இர்பான்  மூக்குடைபட்டு  எடுத்த  முயற்சிகள் அத்தனையும் தோல்வி கண்டு   ஒரு  பனிஷ்மென்ட் இடமாற்றம்  பெற்று  இறக்காமத்திக்கு  சென்றுள்ளார்.முட்டக் கூடாதவர்களுடன் முட்டுவது பேச கூடாத  வார்த்தைகள் திமிர் மற்றும்  இவர் அந்த  உறவுக்கார அதிகாரி ஒருவரின்  பெயரை சொல்லி  எனக்கு  அவர்  சொந்தம் அவர்  இருக்கும்  வரை எனக்கு  பயமில்லை  என்ற  பக்குவப்படாத   வார்த்தைகள் மூலம்  இந்த  இடமாற்றத்தை  இர்பான்  பெற்றுள்ளார்.. 

இர்பானின்  முக்கியமானவருக்கு உயர்  மட்டத்தால் விபரமான விளக்கங்கள்  கொடுக்கப்பட்டது .அதன் பின்னர் அவர் மௌனமானார் .அதன் பின்னர் இறக்காமம் உள்ளூர் அரசியல்வாதியை மூளை சலவை  செய்து பின்னர்தான் இர்பான் இறக்காமத்திக்கு இடமாற்றம்  செய்யும் உத்தரவு  பாக்ஸ்  மூலம் வழங்கப்பட்டது.

இப்போது அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் பகுதிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் பற்றிய தகவல்களை இலங்கை அரசின் புதிய சட்டமான தகவல் அறியும் உரிமை சட்டத்தின்  கீழ் சகல தகவல்களும்  பெற்று இந்த இர்பான்  மீது நடவடிக்கை எடுப்பதற்கான முன்னடுப்புக்கள்  நடை பெற்று வருகின்றன.

இதேவேளை பொத்துவில் பிரதேச  சபையில் முதலாம்  தரத்தில் உள்ள  அதிகாரியொருவரை பதில் செயலராக  நியமித்து பொத்துவில் குறைபாடுகளை   தீர்க்கலாம் .SLMC ஆட்சி மற்றும் முதலமைச்சர்  உள்ளதால் பொத்துவில் முன்னாள்  சேர்மன்  வாசித்  மிகவும் சுலபமாக இதை  சாதிக்கலாம்.அட்டாளைச்சேனைக்கு  பதில் செயலர் ஒருவரை முஸ்லிம்  காங்கிரஸ்  கொண்டுவருமானால் பொத்துவிலுக்கு ஏன்  கொண்டு வர முடியாது?  செய்யுங்கோவன்..
-vk;.vk;.epyhk;Bd;-ஊடகம்-

Post Top Ad

Responsive Ads Here