இலங்கையின் புதிய பாதுகாப்புச் செயலராக மூத்த மேலதிக அரச சட்ட ஆலோசகர் கபில வைத்தியரத்ன நியமிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
இலங்கையின் பாதுகாப்புச் செயலராகப் பணியாற்றும் கருணாசேன ஹெற்றியாராச்சி இம்மாதம் 67 வயதை எட்டுகிறார். சிங்கப்பூரில் இருதய சத்திரசிகிச்சை செய்து கொண்ட இவர் அண்மையில் தான் நாடு திரும்பியுள்ளார். இதனால் அவர் பாதுகாப்புச் செயலர் பதவியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளார்.
அவருக்குப் பதிலாக, மூத்த மேலதிக அரச சட்ட ஆலோசகர் கபில வைத்தியரத்ன புதிய பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து விரைவில் ஓய்வு பெறவுள்ள கபில வைத்தியரத்ன, கடந்த ஆண்டு சட்டமா அதிபர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்.
எனினும், 2014 இல் பிஜி மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவதற்காக, சேவையில் இருந்து இடைவிலகிச் சென்றிருந்த காரணத்தினால் அவருக்கு சட்டமா அதிபர் பதவியைப் பெறும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
கபில வைத்தியரத்ன, 1998 தொடக்கம் 2003 வரையான காலப்பகுதியில், அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயத்தில் யூகோஸ்லாவியா மீது நடத்தப்பட்ட விசாரணையில் சட்டவாளராகப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
MMNi.
MMNi.