LTTE க்கு எதிராக ஜெனிவாவில் முறைப்பாடு - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, February 17, 2017

LTTE க்கு எதிராக ஜெனிவாவில் முறைப்பாடு

Image result for ampaarai MP sarath weerasekara imageImage result for ampaarai MP sarath weerasekara imageImage result for ampaarai MP sarath weerasekara image
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்யும் நோக்கில் முன்னாள் கடற்படை உயர் அதிகாரி ரியர் அட்மிரால் சரத் வீரசேகர ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
விடுதலைப் புலிகள் மேற்கொண்ட 340 போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமெரிக்கப் பிரதிநிதி நிக்கி ஹெலியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்த விபரங்கள் மனித உரிமைப் பேரவையிடமும் ஒப்படைக்கப்பட உள்ளது. சரத் வீரசேகரவுடன் இலங்கையின் இரண்டு சிரேஸ்ட சட்டத்தரணிகள் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் ஜெனீவாவில் முறைப்பாடு செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதற்கு முன்னதாக எந்தவொரு அரசாங்கமும் புலிகளுக்கு எதிரான போர்க் குற்றச் செயல் ஆதாரங்களைளோ தகவல்களையோ வெளியிட்டதில்லை.
எனினும், புலி ஆதரவு புலம்பெயர் தரப்புக்கள் அரச படையினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக போலித் தகவல்களை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ளனர்.
அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை முன்னாள் படையதிகாரிகள் நாட்டுக்காக செய்ய உள்ளனர்  என  மஹிந்த  அணி  தெரிவித்துள்ளது. 
.இந்த  சரத்  வீரசேகர  என்பவர்  மஹிந்த   மற்றும்  கோதாபயவின்  அழைப்பின்  பேரில்  நேவி  படையில் இருந்து  ஓய்வு  பெறப்பட்டு   மகிந்தவின்  அரசியலுக்காக அம்பாறை  மாவட்டத்திக்கு  இறக்குமதி  செய்யபட்டவர். மஹிந்த  காலத்தில் அம்பாறை   தேர்தல்களத்தில்   வெற்றி  அடைந்து    பிரதி  அமைச்சராக   மகிந்தவால்  நியமிக்கப்பட்டார் .இப்போது  மகிந்த  அணி  கொண்ட  MP  யாக  அம்பாறை மாவட்டத்தை பார்த்து  வருகின்றார் ..
M.M.Nilamdeen-

Post Top Ad

Responsive Ads Here