மீனாட்சிபுறம் TO சென்னை புழல்
ஜெயில்-சுவாதி கொலை நடந்தது என்ன -விசேட புலனாய்வு கட்டுரை-பாகம் -04
இது
என்ன புது ட்ராக்? –
சுவாதி பெங்களூருவில் வேலை
பார்த்தவர். அங்கு அவருக்கு இருந்த நண்பர்கள், நட்பு வட்டாரம் ஆகியவற்றைப்
பற்றிச் சில சந்தேகங்கள் மெல்ல வெளியில் வர ஆரம்பித்து உள்ளன.
சுவாதியை யாரோ ஒருவர் அடித்தார் என்று தமிழ்ச்செல்வன்
என்பவர் சொல்கிறார் அல்லவா? அவரேதான், அடித்த இளைஞன் ராம்குமார் அல்ல
என்றும் சொல்கிறாராம்.
அப்படியானால், சுவாதியை அடித்த அந்த இளைஞன்
யார்? இதுதான்
மிகமுக்கியமான சந்தேகமாக உள்ளது.
பெங்களூரு கம்பெனியில் சுவாதி வேலை பார்த்தார். அப்போது
அவருக்குச் சில நண்பர்கள் அறிமுகம் ஆனார்கள். அதன்பிறகு அவர் அந்த இடம், சூழ்நிலை பிடிக்காமல்
சென்னைக்கு வந்துள்ளார்.
அதில் ஒன்றிரண்டு பேர் வந்து சுவாதியை மிரட்டிச்
சென்றுள்ளார்கள். அநேகமாக தமிழ்ச்செல்வன் பார்த்த ஆள் பெங்களூரு நபராக இருக்கலாம்.
அந்த நபர்கள் எதற்காக ஒரு பொது இடத்தில் ஒரு பெண்ணை அடிக்க வேண்டும்?
அவர்கள், சுவாதியிடம் இருந்து என்ன தகவலைப் பெற முயற்சித்தார்கள்? இந்தப் பின்னணி ஆராயப்பட
வேண்டும்’ என்று
விவரம் அறிந்தவர்கள் சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள்.
அதிர்ச்சியாக
இருக்கிறதே? –
இவை சர்ச்சைக்குரியவையாகவும்
அதில் இன்னும் பலமான ஆதாரங்களும் இல்லை என்பதால், அதுபற்றித் தெளிவாகச் சொல்ல
முடியவில்லை.
ராம்குமார் தனது ஒரு தலைக்காதல் மோகத்தால் இந்தக் கொலையைச்
செய்தார் என்று போலீஸ் சொல்வதை நம்பினாலும், அதை மீறி சுவாதிக்கு வேறு ஏதோ
ஒரு அச்சுறுத்தல் இருந்துள்ளது என்ற சந்தேகம் பலமாகவே .உள்ளது
ராம்குமார்தான் கொலையாளி என்று முடிவுசெய்த போலீஸ், உடனடியாக அவரைக் கைதுசெய்யாமல், ஏதோ மிகப் பெரிய தீவிரவாதியைக்
கைதுசெய்யப் போவது போல், ஊரில் உள்ள
மின் விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு, அவரைக் கைதுசெய்யச் சென்றது ஏன்?
இத்தனைக்கும் அங்கு அவர் சாதாரணமாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவர். அவரை அவரது ஊரில் இரண்டு நாட்களாக போலீஸ் மறைமுகமாகக் கண்காணித்து உள்ளது. அவரைக் கைதுசெய்ய விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு, நள்ளிரவு வரை காத்திருந்துப் போக வேண்டிய அவசியம் ஏன் வந்துள்ளது.
இத்தனைக்கும் அங்கு அவர் சாதாரணமாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவர். அவரை அவரது ஊரில் இரண்டு நாட்களாக போலீஸ் மறைமுகமாகக் கண்காணித்து உள்ளது. அவரைக் கைதுசெய்ய விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு, நள்ளிரவு வரை காத்திருந்துப் போக வேண்டிய அவசியம் ஏன் வந்துள்ளது.
ஆனாலும் போலீஸ் அப்படிப் போனது ஏன் என்று சந்தேகங்கள்
கிளப்புகிறார்கள். ‘ஏதோ
பெரிய நெட்வொர்க் கொண்ட நபராக இருக்கலாம்’ என்று போலீஸை யோசிக்கவைத்த
சூழ்நிலை என்ன என்பதுதான் இப்போதைய கேள்வி!
சுவாதியின் செல்போனை
ராம்குமாரிடம் இருந்து கைப்பற்றியதாக போலீஸ் சொல்கிறது. ஆனால், அவரது லேப்டாப் பற்றி இதுவரை
எந்தப் பேச்சும் இல்லை.செல்போனில் இருந்த விஷயங்கள் என்ன என்ற தகவலும்
வெளிவரவில்லை. லப்டாப் பற்றி பேச மறுக்கிறது போலீஸ்.
பெங்களூர்
பெங்களூரு நண்பர்கள் சுவாதியை அடிக்கடி அந்த லப்டாப்பில்
உள்ள தகவல்களை அழிக்கும்படி கூறி மிரட்டியதாக, சுவாதியின் நண்பர்கள் சிலர்
இந்த வழக்கின் ஆரம்பத்தில் தெரிவித்தனர்’ என்கிறார்கள்.
அப்படியானால், அந்தத் தகவல்கள் என்ன என்பது
இன்னமும் கேள்விக்குறியாக உள்ளது.ராம்குமாருடன் விடுதியில் தங்கியிருந்து அவருக்கு
உதவிகள் செய்தவர் என்ன ஆனார்?
கொலைக்குப் பயன்பட்டதாகக்
கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதம் கர்நாடக மாநிலத்தில் பயன்படுத்தப்படுவது என்று முதலில்
சொல்லப் பட்டது.
பெங்களூருக்கும் இந்த அரிவாளுக்கும் தொடர்பு
உள்ளதே.சுவாதியின் டிசம்பர் மாத முகநூல் பக்கத்தில், ‘நீ என்னை முந்திக்கொள்வதற்குள்
நான் உன்னை முந்திக்கொள்வேன், நான் ஏமாற மாட்டேன்’ என்றொரு பதிவை, சுவாதி போட்டிருந்ததாகச்
சொல்லப்படுகிறது.
அப்படியானால், அவருக்கு மிரட்டல் இருந்தது
யாரால்?
முக்கியமான
கேள்விகள்தான்? –
சுவாதிக்கும் ராம்குமாருக்கும்
ஃபேஸ்புக்கில் மியூச்சுவல் ஃப்ரெண்டாக இருந்தவர் சூரிய பிரகாஷ். சுவாதி இறந்ததும், அவரது நண்பர் என்கிற பேனரில்
முகமது பிலால் சித்திக் தன்னை வெளியே காட்டிக்கொண்டார்.
ஆனால், சூரிய பிரகாஷ் ஏனோ தன்னைக் காட்டிக்கொள்ளவே இல்லை. இவர் யார்? ஏன் மௌனமாக இருக்கிறார்? போலீஸ் ஏன் அவரை
விசாரிக்கவில்லை?
சிறையில்
ராம்குமார் எப்படி இருக்கிறார்? –
கடந்த 5-ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ராம்குமார்.
யாரிடமும் பேசாமல் அமைதியாகவே ராம்குமார் இருக்கிறார். சிறையில் திட உணவுகளைச்
சாப்பிடுகிறார்.
ராம்குமாரை சிறையில் உள்ள டாக்டர்கள் குழுவினர்
பரிசோதித்தனர். அப்போது, ராம்குமாரிடம், ‘கழுத்தில் வலி இருக்கிறதா?’ என்று கேட்டபோது ‘இல்லை’ என்று ஒற்றை வரியில்
பதிலளித்துள்ளார்.
கொலைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மனுப்
போட்டிருந்தார் ராம்குமார். பின்னர் சிறை வளாகத்தில் தனியாக உள்ள மருத்துவமனை பகுதியில்
(ஆஸ்பத்திரி பிளாக்) தனி அறையில் அடைக்கப்பட்டிருக்கிறான
கைது செய்யப்பட்ட போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற
ராம்குமார் மீண்டும் சிறையில் அது போன்ற செயல்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதில்
சிறை துறையினர் மிகுந்த கவனமுடன் செயல்படுகிறார்கள்.
இதற்காக ராம்குமார் அடைக்கப்பட்டுள்ள தனி அறை அருகே 2 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர்.
சிறையில் ராம்குமார் கேட்கும்
உணவை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுவாதி படுகொலை வழக்கின் உண்மைகளைக் கண்டறிய எவிடென்ஸ்
அமைப்பினர் களமிறங்கியுள்ளனர்.
படுகொலை வழக்கை அவசர கதியில் முடித்து வைக்கவே போலீஸார்
விரும்புகின்றனர். குறிப்பாக, ராம்குமார் பேசிவிட்டால் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்பதால்
சிறையில் கெடுபிடி செய்கிறார்கள்’ என்கிறார் எவிடென்ஸ் பணிப்பாளர் கதிர்.
வழக்கின் உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கவே போலீஸார்
விரும்புகின்றனர்.அவரைக் கைது செய்தபோது, கழுத்தை அறுத்ததற்குக் காரணமே, அவர் பேசக் கூடாது
என்பதற்காகத்தான்’ என
வழக்கறிஞர்கள் சிலர் பேசி வந்தனர்.
இந்நிலையில், சுவாதி படுகொலை வழக்கின்
உண்மையைக் கண்டறிய மதுரை எவிடென்ஸ் அமைப்பு களமிறங்கியுள்ளது.
நான்கு பேர் கொண்ட குழுவினர் செங்கோட்டை, சென்னை உள்பட சில பகுதிகளில்
ஆய்வு செய்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் குழுவின் அறிக்கையை பொதுமக்கள்
பார்வைக்கு வைக்கவுள்ளனர்.
இது தொடர்பாக எவிடென்ஸ் கதிர் தெரிவிக்கையில். சுவாதி
படுகொலை வழக்கின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்
கருத்தில்லை.
ராம்குமார் மட்டும்தான் குற்றவாளி என போலீஸார் அவசரம்
அவசரமாக வழக்கை முடிக்க நினைக்கின்றனர். அவர்தான் குற்றவாளி என்றால், கடுமையான தண்டனையை நீதித்துறை
வழங்கட்டும்.
அதற்குள்ளாகவே, போலீஸாருக்கு முதல்வர்
பாராட்டுப் பத்திரம் வழங்க வேண்டிய அவசியம் என்ன? விரைவாக விசாரணை நடத்தினால்
மட்டுமே, போலீஸாரின்
கை ஓங்கும் என்பதால் வழக்கை அவசரப்படுத்துகின்றனர்.
அவரைக் கைது செய்ய தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர்
பாலமுருகன்தான் வந்திருக்கிறார். செங்கோட்டை போலீஸார் வரவில்லை.
அன்று மாலை 5 மணிக்கே ராம்குமார் கிராமத்தை
போலீஸ் வளைத்துவிட்டது. வீட்டின் பின்புறம் உள்ள ஆட்டுத் தொழுவத்தில் ராம்குமார்
தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
அவரது கழுத்தை அறுத்தபோது எந்தப் பிளேடும் அவர் கையில்
இல்லை. மயங்கிய நிலையில் இருந்தவரை, போலீஸ்காரர்கள்தான் அவரது அப்பா
பரமசிவத்திடம் காட்டியுள்ளனர்.
சுவாதி கொலை நடந்த அன்று இரவு சென்னையில் இருந்து சொந்த
ஊருக்கு வந்திருக்கிறார் ராம்குமார்.
மற்ற நாட்களில் வந்திருந்தால் பிரச்சினை இல்லை. அன்று இரவே
ஊருக்கு வரவேண்டிய அவசியம் என்ன?’ என்று ராம் மோகன் அப்பாவிடம்
கேட்கப்பட்ட போது : அவன் அடிக்கடி ஊருக்கு வருவது வழக்கம். ஐந்து பேப்பர்களில்
அரியர்ஸ் இருந்ததால், கோச்சிங்
கிளாஸ் போவதற்காக நான் மாதம்தோறும் ஐந்தாயிரம் பணம் அனுப்பி வந்தேன்.என்கின்றார்.
இங்கு நாம்
மற்றுமொரு சந்தேகத்தை பரமசிவம் மேல் தருகின்றோம் .அதாவது சென்னைக்கும்
திருநெல்வேலிக்குமான தூரம் என்பது
சுமார் 13 -14 மணிநேரப் பயணம் .இரவு
வேளை.பகல் வேளை என்றால்
என்னும் நேரம் அதிகரிக்கும்.இங்கு 5 ஆயிரம்
பணம் வீட்டில் பெறுவதற்கு சென்னை to நெல்லை to சென்னை போக்குவரத்து செலவு குறைந்தது 2 ஆயிரம் ரூபா செலவாகும்..
ஆக 5 ஆயிரம் ரூபா பணம்
பெறுவர்தற்கு 2 ஆயிரம் செலவு
செய்து வீட்டுக்கு போனது
என்று சொல்லும் காரணம் நிச்சயமாக ஏற்புடையதல்ல.5 பணம் சென்னைக்கு அனுப்புவர்தற்கு பல வழிகள்
இருக்கும் போது பரம சிவம்
சொல்லுவது சரியா ? பரம சிவம் நாலும் தெரிந்த ஒருவர்.அதனால் பணம் அனுப்ப
இவருக்கு தெரியாதா ?
அடுத்து 5 ஆயிரம்
அனுப்பி வந்தேன் என்றுதான்
சொல்லுகின்றார் .ராம் மோகன் வந்துதான்
வாங்கி செல்கின்றார் என்று அவர்
சொல்லவில்லை.மை லோட் நோட் தெ பான்ட்
யூர் ஆர்னர் ..
அன்றைக்கும் வழக்கம்போலத்தான் ஊருக்கு வந்தான்’ என்கிறார்.
சம்பவம் நடந்த ஒரு வாரமும் ராம்குமாரின் செயல்பாட்டில் எந்த
வித்தியாசமும் இல்லை. அவர் இயல்பாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
சுவாதியின் செல்போனை ராம்குமாரிடம் இருந்து கைப்பற்றியதாக
போலீஸ் சொல்வது தவறு. அப்படி எந்தப் போனும் அவரிடம் இல்லை.
அவரைக் கைது செய்த பிறகு மூன்று நாளுக்குப் பிறகு, ராம்குமார் தங்கையிடம் இருந்து
ஒரு கைப்பையை போலீஸார் எடுத்துக் கொண்டு போயுள்ளனர். இதற்கு ராம்குமாரின் தங்கை
எதிர்ப்பு காட்டியுள்ளார்.
வீடியோவில் உள்ள பை இதுதான். இந்த பையில்தான் அரிவாளை
வைத்திருந்தான்’ எனக்
காட்டுவதற்காகவே, போலீஸார்
கைப்பற்றியுள்ளனர்.]
போலீஸ் சொல்லும் காரணங்கள்
படுகொலை நடந்தது 12 முதல் 15 விநாடிகளுக்குள்’ என்கிறது காவல்துறை. ‘ கொலையாளி அங்கிருந்த பூச்செடியை
காலால் உதைத்துவிட்டு, அரிவாளால்
வெட்டிவிட்டு 2 நிமிடங்கள்
அங்கு நின்றிருந்தான்’ என்கின்றனர்
போலீஸ் சாட்சிகள்.
சம்பவ இடத்தில் இருந்தவர்கள், ‘ அந்தக் கொலையாளி பிடிபட்ட
ராம்குமார் அல்ல’ என்கிறார்கள்.
அப்படியானால், ‘ சுவாதி கொல்லப்பட வேண்டும் என எண்ணிய நபர்கள் யார்... ?
ஒருவர் மட்டுமே குற்றவாளி என இறுதி முடிவுக்கு போலீஸ் வந்தது
தவறு என்றுதான் சொல்கிறோம். கொலையில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரும் தண்டிக்கப்பட
வேண்டும்.
அதற்காகத்தான் உண்மைக் கண்டறியும் குழுவினரோடு பயணித்துக்
கொண்டிருக்கிறோம் என்கின்றனர் மதுரை எவிடன்ஸ் .
சுவாதி படுகொலையின் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.
கேள்விகளும் சர்ச்சைகளும் அணிவகுத்துக் கொண்டேயிருக்கின்றன.அவிழ்க்க முடியாத மர்மங்களும் சந்தேகங்களும் நுங்கம்பாக்கத்தில்
கொலை செய்யப்பட்ட ஸ்வாதி மரணத்தில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
ஸ்வாதியை ராம்குமார் கொலை
செய்தது "ஒரு தலைக்காதல்' என்றும் ‘ராம்குமாரை தவிர வேறு யாருக்கும் இக்கொலையில் சம்பந்தமில்லை’ என்றும் சென்னை மாநகர கமிஷனர்
டி.கே.ராஜேந்திரன் அவசரமாக; அழுத்தமாக
ஊடகங்களுக்கு அளித்த பேட்டியும், கைது செய்யப்பட்ட போது ராம்குமாரின் கழுத்து அறுபட்டதுமே
இந்த மர்மங்களையும் சந்தேகங்களை உருவாக்கியுள்ளது..
அத்துடன் நாளாந்தம் இந்தக் கொலை சம்பந்தமாக புதுப் புது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது
(தொடரும்)

