மீனாட்சிபுறம் TO சென்னை புழல் ஜெயில்-சுவாதி கொலை நடந்தது என்ன -விசேட புலனாய்வு கட்டுரை-பாகம் -03 - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, July 26, 2016

மீனாட்சிபுறம் TO சென்னை புழல் ஜெயில்-சுவாதி கொலை நடந்தது என்ன -விசேட புலனாய்வு கட்டுரை-பாகம் -03

மீனாட்சிபுறம் TO  சென்னை புழல் ஜெயில்-சுவாதி கொலை        நடந்தது   என்ன  -விசேட புலனாய்வு   கட்டுரை-பாகம் -03




ராம்குமார் வாக்குமூலம்

ஸ்வாதியை நேரில் பார்த்து பழகிய மூன்றே மாதத்தில் அவளைக் கொலை செய்யும் அளவிற்கு ராம்குமார் போவானா என போலீஸாரிடம் கேட்டதற்கு, நெல்லையில் அவன் கைது செய்யப் பட்ட பிறகு அளித்த வாக்குமூலத்தை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
படிக்கிற காலத்திலிருந்தே ஃபேஸ்புக்கில் ஆக்ட்டிவ்வாக இருந்திருக்கிறான் ராம்குமார். அவன் தனது படத்தை அதில் பதிவிட, அவனது கல்லூரி நண்பர்கள் செங்கோட்டை சிங்கம், ஐன்ஸ்டீன் அழகன் (ஐன்ஸ்டீன் கல்லூரி யில் படித்தான்) என்று வர்ணித்து உசுப்பேற்றியுள்ளதை போலீஸ் தரப்பு சுட்டிக்காட்டுகிறது.

ராம்குமாரின் வாக்கு மூலம் எனக் காட்டும் போலீஸ் அதில், ""பேஸ்புக்கில் ஸ்வாதியுடன் 2015ம் ஆண்டே நண்பராகப் பழகினேன். ஸ்வாதி தனது நட்பு வட்டாரத்திற்கென ஒரு வாட்ஸ்-அப் குரூப் இயக்கி வந்தார். அதில் நான் சமூக அக்கறை யுடன் இடும் கருத்துகளை ஸ்வாதி ஷேர் செய்வார். அதற்காக என்னைப் பாராட்டுவார்.

அவருடன் நட்பை நேரில் தொடர சென்னை வந்தேன். வெறும் ஃபேஸ்புக் நண்பனான என்னை சூர்யா என்கிற நண்பர் கோயிலில் வைத்து ஸ்வாதியிடம் நேரில் அறிமுகம் செய்தார். தினமும் அவருடன் ரயில்நிலையத்திலும் கோயிலிலும் பேசினேன். அவரிடம் எனது காதலை தெரிவித்தேன். அதை அவர் ஏற்கவில்லை.

அவர் என்னைப் பற்றி விசாரித்தார். நான் எஞ்சினியரிங் ஃபெயில், துணிக்கடையில் வேலை பார்க்கிறேன் என்று சொன்னேன். பல முறை வலியுறுத்தியும் என் காதலை ஏற்காத ஸ்வாதி, "நீ கறுப்பாக தேவாங்கு போல் இருக்கிறாய்' என்று எரிந்து விழுந்தார். திரும்பத் திரும்ப இப்ப டிச் சொன்னார்.

எஸ்.ஜே. சூர்யாவின் படங்களைப் பார்த்த நான், சினிமா டைரக்டராகும் ஆசையில் முயற்சி செய்து வந்தேன். என் நடை, உடை, பாவனைகளை மாற்றி ஸ்வாதியை பின்தொடர்ந்து கெஞ்சினேன்."இப்படி செய்தால், என் அப்பாவிடம் சொல்லிடுவேன்' என்று எச்சரித்தார். ஆனால் அப்படி செய்யவில்லை.

அதனால் என்னை அவர் லவ் பண்ணுவதற்கான சிக்னல் என நினைத்தேன். இறுதியாக அவரிடம் "காதலுக்கு சம்மதமா? இல்லையென்றால் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்-அப் பிலும் என்னைப் பாராட்டியதற்கான காரணம் காதல் இல்லையா' என கேட்டேன். அவர் "போடா தேவாங்கு' என்று மறுபடியும் சொன்னார்.அந்த ஆத்திரத்தில்தான் அவரது வாயை வெட்டினேன். அடுத்து அவர் கழுத்தை வெட்டினேன்'' என்று வாக்குமூலம் தந்ததாக போலீஸ் கூறுகிறது.
சொந்த ஊரில் ராம்குமார் பற்றி விசாரித்த போது, ""அவனது வீட்டருகேதான், அவனது பாட்டி கடை வைத்திருக்கிறார். நான்கு வருடத்துக்கு முன்பு அவன் கடையில் இருந்தபோது, கடைக்கு வந்த கிராமத்து பெண் ஒருவரிடம் எசகுபிசகாக நடக்கப் பார்த்தான். என்று  சொல்லுகின்றது போலீஸ்.


அந்தப் பெண் சத்தம் போட்டு தெருவைக்கூட்ட, ராம்குமார்க்கு தருமஅடி விழுந்தது. அவனோட அப்பா-அம்மா அவனை கடுமையா கண்டிச்சாங்க. இது வயசுக் கோளாறு விவகாரம்னு விட்டுட்டோம். ஆனா, அவனுக்கு அதே ஆசை இருந்திருக்கணும். மற்றபடி கொலை செய்வானான்னு தெரியாது'' என்கிற வர்கள், அவன் கைது செய்யப்பட்ட விதம் குறித்து பலத்த சந்தேகத்தை எழுப்புகிறார்கள்.


கொலையாளி உயிருக்கு ஆபத்து? - மேலிடம் வரை செல்வாக்குள்ள சமுதாயத்தை சேர்ந்த குடும்பம் என்பதால் ஸ்வாதி பற்றி உணர்ச்சி வேகத்தில் ராம்குமார் எதுவும் வாய் திறந்து விடக் கூடாது.. என்ற அக்கறையினாலேயே ராம்குமாரை பேச விடாமல் செய்யும் யுக்தியாக இந்தக் கழுத்தறுப்பு வேலை நடந்திருக்கிறது என்ற சந்தேகம் ஊரில் பலருக்கும் உள்ளது
போலீஸ் பிடிக்க வந்த நேரத்தில், அந்தப் பகுதியில் கரண்ட் கட் ஆகியுள்ளது. அதனால் ராம்குமாரே கழுத்தை அறுத்துக்கொண்டானா என்ற சந்தேகமும் ஊர் மக்களிடம் உள்ளது. ரயில் தண்டவாளத்தைக் கடந்து ஓடும் சி.சி.டி.வி உருவத்தின் கையில் அரி வாள் இல்லை. சட்டையில் இரத்தக்கறையும் இல்லை.

ஆனால் போலீசோ இரத்தக்கறை படிந்த சட்டையை அவனோட ரூமிலிருந்து எடுத்ததாக சொல்லுது.இத்தனை டெக்னிகலாக உயிருக்கு பங்கம் வராமல், பிளேடால் ஒருவன் கழுத்தை அறுத்துக் கொள்ள முடியுமா? முதலில் பேச விடாமல் செய்து, பிறகு "நீ இப்படித்தான் ஸ்டேட்மென்ட் கொடுக்க வேண்டும்' என்று வகுப்பு எடுத்துவிட்டு, அப்புறம் பேச வைத்த காரியம்தான் இப்போது நடந்திருக்கிறதோ என்கிற ரீதியில் சந்தேகம் கிளப்புகிற மீனாட்சிபுரம், விசாரணை முடியும்வரை ராம்குமார் உசுரோடு நல்லபடியாக இருப்பானா என்றும் பயப்படுகிறது.

தொடரும் மர்மங்கள் - போலீஸ் சுட்டிக்காட்டும் ராம்குமாரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், ஸ்வாதியிடம் அவன் நேரில் பேசியிருக்கிறான். அப்படியிருக்க, யாரோ ஒருவன் தன்னைப் பின் தொடர்வதாக தன் தந்தை யிடம் சொன்ன ஸ்வாதி, அவன் தனக்கு அறிமுகமான ராம்குமார்தான் என ஏன் சொல்லவில்லை.என்ற  கேள்வி  எழுகின்றது .


தனது மனதில் உள்ளதை நட்புமுறையில் பகிர்ந்து கொள்ளும் பிலாலிடம்கூட ஏன் ராம்குமார் பெயரைச் சொல்லவில்லை? ஸ்வாதிக்கும் ராம்குமாருக்கும் வீட்டுக்கு அருகேயுள்ள கோயிலில் வாக்கு வாதம் நடந்திருக்கிறது. ராம்குமார், ஸ்வாதியைப் பின்தொடர்வதை அந்தக் கோயிலின் குருக்கள் பார்த்துள்ளார்.
இதுபோல அந்தப் பகுதியில் வேறு யாராவது பார்த்துள்ளார்களா? ராம்குமார்தான் ஒரே கொலையாளியா, இதன் பின்னணியில் இன்னும் பல சங்கதிகள் புதைந்துள்ளனவா? இத்தனை மர்மங்களுக்கும் விடை தரவேண்டிய கடமை, கொலையாளியை விரட்டிப்பிடித்த காவல்துறைக்கு இருக்கிறது
ராம்  குமார் தந்தை –பரமசிவன்  
முத்துக்குமார் என்று கூறி என் மகனை போலீசார் கைது செய்துள்ளதாக சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் தந்தை பரமசிவன் கூறியுள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் கடந்த 1ம் தேதி நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்வதற்காக போலீசார் சென்றபொழுது ராம்குமார் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியானது. சிகிச்சைக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராம்குமார்.
இதனிடையே அவரது தந்தை பரமசிவன், தாயார், இரு தங்கைகளையும் போலீஸார் இரகசிய இடத்திற்குக் கொண்டு போய் தீவிரமாக விசாரித்தனர். இது பெரும் சர்ச்சைகளையும் கிளப்பியது.
இந்நிலையில், ராம்குமாரின் தந்தை பரமசிவன் அவரது ஊரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனது மகன் ராம்குமார் கல்லூரி தேர்வில் 5 பாடங்களில் தோல்வியடைந்ததை தொடர்ந்து சென்னைக்கு சென்று சிறப்பு வகுப்பில் சேரவேண்டும் என்றார். அதற்காக அவர் சென்னை சென்றார்.ஆனால் 10 பாடம்  அரியர்   உள்ளதாக நெல்லை  முஸ்லிம்  மாணவர் ஒருவர்  ராம் குமாருடன் படித்தவர் சொல்லுகின்றார்.
கடந்த சிலதினங்களுக்கு முன் செலவுக்கு பணம் வேணும் என்று கூறி வாங்குவதற்காக இங்கு வந்தார். அப்போது தான் நள்ளிரவில் போலீசார் வந்து 'முத்துக்குமார் முத்துக்குமார்' என்று கூப்பிட்டனர்.
இங்கே  நமக்கு  ஒரு சந்தேகம் அந்த நள்ளிரவு  வேளையில்  மகள்  கதவு  திறப்பாரா? அதுவும் தகப்பன்  வீட்டில்  இருக்கும் போது ?இதனைப் பார்த்த நான் மயக்கம் அடைந்து விட்டேன் என்று கூறினார்.
நாம்  ராம்  மோகன்  தங்கை  காளீஸ்வரி மூலம் அவரது  வாட்ஸ் அப் மூலம் பரமசிவத்திடம் பேசிய  போது எனது மகன் இந்த தவறை செய்யவில்லை. சுவாதியை ராம்குமார் தான் கொலை செய்தார் என்பதை ஏற்க மாட்டேன். என்கின்றார். எம்மிடம்  பேசிய  பரமசிவம்  இரவு 11.30 மணிக்கு  யாரோ 'முத்துக்குமார் முத்துக்குமார்' என்று கூப்பிட்டனர் சப்தம் கேட்டு  நான் கதவை திறந்தேன். திடீர் என்று வெளியே போலீசார் நின்று கொண்டு உங்கள் மகன் கழுத்தை அறுத்துக்கொண்டார் என்று கூறினர்.
பாருங்கள் இரண்டு முரண்பாடுகள் மகள் கதவு திறந்தார்  என்பதும் நான்தான்  கதவு திறந்தேன் என்கின்றார்.
இந்த கொலைக்கும் எனது மகன் ராம்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வழக்கில் போலீசார் எனது மகனை குற்றவாளியாக்கி விட்டனர். உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரி தமிழக முதல்வருக்கும், உள்துறை செயலாளர், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கும் கடிதம் அனுப்பபியுள்ளேன்.ஆனாலும் ஊடகம்> ஊடகம் சார்ந்தோர்தார்தான் இதன்  உண்மை தன்மையை  கொண்டு வர வேண்டும்.தமிழக  போலீஸ்சை  விடவும்  நாங்கள்  ஊடகத்தைதான் மிகவும்  நம்பியுள்ளோம் என்கின்றார் பரமசிவம்..நாம்  இன்னும் பரமசிவத்திடம் பேசவேண்டியுள்ளது.பின்னர் பேசுவோம்
சுவாதி கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.இதில் தமிழக முதல்வர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் இருந்து ராம்குமார் கண்டிப்பாக விடுதலையாவார் என ராம்குமாரின் தந்தை தெரிவித்தார்..
ராம் குமார் குற்றவாளி இல்லை -நிருபிப்போம் தங்கை காளீஸ்வரி  சபதம்
------------------
ஆரம்பத்தில்  அண்ணை  எங்க  அண்ணன் ராம்  குமார்  கொலை செய்யவில்லை போலீஸ் தான்  எங்க அண்ணனை  கொலை காரனாக்கி  விட்டது என்று  அழுதார்.சற்று நேரம்  அழுதவர் பேசினார்.

ராம்குமாரின் தந்தை பரமசிவன், மற்றொரு தங்கை காளீஸ்வரி ஆகியோர் சென்னையில் தங்கியிருந்து ராம்குமாரை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தவர்கள்
எங்க அண்ணனுக்கும், சுவாதி கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீசார் எப்படியோ எனது அண்ணனை இதில் சிக்க வைத்து விட்டனர். அவர் குற்றவாளி இல்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என்றார் 
எங்கள் அண்ணன் வி.ஏ.ஓ. தேர்வில் பாஸ் செய்வதற்காக எப்போதும் புத்தகம் படித்து கொண்டு இருப்பான். இப்போது அவரது வாழ்க்கையை சீரழித்து விட்டனர். அவன் உண்மை குற்றவாளி இல்லை என்று விரைவில் தெரியவரும். எங்க  அண்ணன் தான் உண்மை குற்றவாளி என்று போலீசார் புகைப்படத்தை வெளியிட்டு விட்டனர். பெண் என்றும் பாராமல் எங்கள் படத்தையும் வெளியிட்டு குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டனர் என்றார்.உண்மையில் இந்த காளீஸ்வரிக்கு  எதுவுமே  தெரியாது  அண்ணன் பாசம் இப்படி  இந்தப்  பொண்ணை பேச வைக்கின்றது என்பது நமக்கு புரிகின்றது  அதனால்  இந்தப் பொண்ணோடு பேச வேண்டிய தேவை  நமக்கு  வராது.

சபதம் நல்லாத்தான் இருக்கு ஆனா போலீஸ் நிறைய ஆதாரம்.எடுத்து விட்டது .மற்றும் போலீஸ் தனியாக எடுத்து விசாரித்துள்ளது. நிறைய  ஆதாரம்கள் மற்றும்  ஒப்புதல்  வாக்கு மூலம் பெற்றுள்ளார்கள் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளது  என்கின்றார்  DSP முத்துவேலு பாண்டி
 ராம் குமார்  வக்கீல் ராமராஜ்  புழல் ஜெயில் சென்று ராம் குமாரை பார்த்தார்
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை வழக்கறிஞர் ராமராஜ்  சந்தித்து பேசியயுள்ளார்.
இதுகுறித்து வழக்கறிஞர் ராமராஜ் கூறியதாவது, "ராம்குமாரிடம் தனியாகப் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்காமல், சிறைத்துறை கண்காணிப்பாளர், மூன்று காவலர்கள் என சுற்றி நின்று கொண்டனர்.
இவ்வாறு அவர்கள் நடந்து கொள்வது ஆச்சரியமளிக்கிறது.தந்தை பரமசிவம் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தவர்.
சிறு வயதில் இருந்தே அந்தக் குடும்பத்தை எனக்குத் தெரியும். இப்போது மொத்தக் குடும்பமும் இந்த சம்பவத்தால் பரிதவித்து வருகிறது.
அவர்களது அனுமதியின் பேரில்தான் புழல் சிறைக்குச் சென்று பார்த்தேன். கைது செய்யப்பட்ட நாளில் இருந்தே மிகுந்த மனப்பதட்டத்தில் இருக்கிறார் ராம்குமார். உளவியல்ரீதியாகவும் உடல்ரீதியாகவும் காவல்துறை கடுமையான சித்ரவதைகளைச் செய்திருக்கிறது.
அவரது கழுத்துப் பகுதி, அரை வட்டத்தில் அறுக்கப்பட்டிருக்கிறது. தற்கொலை முயற்சியில் ராம்குமார் இறங்கவில்லை. காவல்துறையினரே அனைத்தையும் செய்தார்கள்" என்று அதிர்ச்சி கிளப்பிய ராமராஜ் மேலும் தொடர்ந்தார்,
"சிறை அதிகாரிகள் அருகில் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாத ராம்குமார், ' நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது சார். என்னை மட்டும் சிக்கவைத்துவிட்டார்கள்.என்று ராம்  குமார் பேசியுள்ளான்.
ஒரு வருடத்திற்கு முன்பே சுவாதியை எனக்குத் தெரியும். பேஸ்புக் மூலமாகத்தான் இருவரும் பேசி வந்தோம். சேட்டிங்கில் நிறைய பேசுவார். BE படிப்பில் நான்கு அரியர் இருந்ததால், எங்குமே வேலைக்குப் போக முடியவில்லை.
சென்னையில் ஏதேனும் வேலை கிடைத்துவிடும் என்று நம்பித்தான் சென்னை வந்தேன். சுவாதி வசிக்கும் பகுதியிலேயே மேன்சனில் அறை எடுத்து தங்கினேன்.
ஆனால், சென்னை வந்த நாளில் இருந்து எந்தக் கம்பெனிக்கும் வேலைக்குப் போகவில்லை. இடையில் எதிர்பாராமல் என்னவெல்லாமோ நடந்துவிட்டது. சுவாதி சாவுக்கு நான் மட்டும் காரணமல்ல. சிலரின் தூண்டுதலில்தான் நடந்தது' என்ற ராம்குமார் மேலும் சில தகவல்களைச்  சொல்லியுள்ளான்.
ஆனால், அதை இப்போதைக்கு சொல்வதற்கில்லை. வழக்கு விசாரணையின்போது தேவைப்பட்டால் சொல்லுவேன். தற்போது ராம்குமார் அளவுக்கு அதிகமான மனப் பதட்டத்தில் இருக்கிறார்.என்கின்றார்  வக்கீல்  ராம் ராஜ்..இந்த  வக்கீல் பற்றி பின்னர் பார்ப்போம் 
பொலிசார் எதையாவது செய்துவிடுவார்கள் என பயப்படுகிறார். தொடக்கத்தில் இருந்தே வழக்கை முடித்துவிடவே காவல்துறை அவசரம் காட்டுகிறது. உண்மையை நிலைநாட்டுவதற்கு காவல்துறை விரும்பவில்லை என்றே தெரிய வருகிறது. என்கின்றார்  வக்கீல்  ராம் ராஜ்.
வழக்கு தயார்
சுவாதி கொலை வழக்கில் உண்மையான விசாரணையே இப்போதுதான் தொடங்கி உள்ளது என்று விவரம் அறிந்தவர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். சுவாதி கொலை வழக்கை முதலில் ரயில்வே போலீஸ் விசாரித்தது. அதன்பிறகு, அது சென்னை மாநகர போலீஸ் வசம் வந்தது.
இப்போது அது NIA என்று சொல்லப்படும் தேசியப் புலனாய்வு ஏஜென்சியின் வசம் ஒப்படைக்கப்படலாமோ என்ற நிலைமை எழுந்துள்ளது. அந்த ஏஜென்சியைச் சேர்ந்த அதிகாரிகள் சத்தமில்லாமல் சென்னை  வந்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். என்று சென்னை  ரகசிய  தகவல்  ஒன்று  சொல்லுகின்றது 
இது என்ன புது ட்ராக்?  (தொடரும்)

Post Top Ad

Responsive Ads Here