மீனாட்சிபுறம் TO சென்னை புழல் ஜெயில்-சுவாதி கொலை நடந்தது என்ன -விசேட புலனாய்வு தொடர் கட்டுரை -பாகம் -01 - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, July 17, 2016

மீனாட்சிபுறம் TO சென்னை புழல் ஜெயில்-சுவாதி கொலை நடந்தது என்ன -விசேட புலனாய்வு தொடர் கட்டுரை -பாகம் -01

(எம்;எம்;. நிலாம்டீன்  வழங்கும்  தொடர்  கட்டுரை-பாகம்-01 )
++                                                    +++++
கடந்த மாதம் 24 ஆம் திகதி காலை பல எதிர்காலக் கனவுகளை சுமந்த படி தனது வேலைக்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு வந்தவள்தான் சுவாதி.
மீன்தொட்டிக்குள் இருக்கும் மீன்களின் உயிரைப் பறிப்பதற்காக மீன்தொட்டியை நிலத்தில் போட்டு உடைப்பது போல் கனவுகளை சுமந்த படி வந்தவளை கழுத்தறுத்து கல்லறைக்கு அனுப்பினான்  ஒரு  கயவன் காரணம் கேட்டால் காதலாம் தனி நபரின் ஆசைகளை எவ்விதம் காதலாக வர்ணிக்க முடியும். ஒரு  தலைக்  காதல் தந்த  மர்மம் நிறைந்த ஒரு இளம்  பெண்ணின்  கொலையை  தொடர்ந்து  பார்ப்போம் ..

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் திகதி சுவாதி என்ற  இளம் IT Engineer  மர்மநபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். காலை 6.30 மணி நுங்கம்பாக்கம் ரயில் நிலையயம்  கூட்டம் நிறைந்து  காணப்படுகின்றது. 

சென்னை  பீச் இருந்து செங்கல்பட்டு வரையுமான மின்சார ரயிலுக்காக  சுவாதி காத்துக் கொண்டிருக்கிறார்.காரணம்  சுவாதி  செங்கல்பட்டு பரனூரில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் Engineer  ராக வேலை  பார்க்கின்றார்..அதனால்  நாளாந்தம்  நுங்கம்பாக்கம் to செங்கல்பட்டு மின்சார  ரயிலில்  பிரயாணம்  செய்வது  வழமை.அந்த வகையில் இப்போது ரயிலுக்கு  காத்துக் கொண்டிருக்கின்றார்.

அப்போது  6.40 க்கு ஒரு ஒரு  கயவன் சுவாதிக்கு  பின்னால்  சற்று  பக்கவாட்டில் நின்றவாறு  சதக்  சதக் என்று  கொடுப்புக்  பகுதியை குத்திக்கொண்டு கழுத்துக் பகுதியையும்  குத்திவிட்டு அவ்விடத்தை விட்டு துரிதமாக நடந்து செல்கின்றான். சுவாதி அவ்விடத்திலேயே இரத்த  வெள்ளத்தில் விழுந்து விட்டார். அவ்விடத்தில்  நின்ற யாரும்  கொலை காரனை  பிடிக்கவில்லை.அவ்விடத்தில் ஒரு  CCTV  யும் இல்லை. அதனால் கொலைகாரன் வந்த வேலையை 2 நிமிடத்தில் முடித்து விட்டு   சென்று விட்டனர் 
.
கொலை  நடந்து முடிந்து  2 மணிநேரம்  கடந்து ரயில்வே போலீஸ்  விசாரணைக்கு வருகின்றது.விசாரணை  முடிந்த பின்னர் நுங்கம்பாக்கம்  போலீஸ்  சும்மா போமல்டிக்காக கொலையை வந்து  பார்த்து விட்டு  செல்கின்றது.காரணம்  ரயில்வேக்கு என்று  தனியான  போலீஸ்  உள்ளது.சம்பவம் ரயில்வே  நிலையத்தின்  உள்ளே நடந்துள்ளதால் நுங்கம்பாக்கம் போலீஸ் இந்த சம்பவத்தில் மூக்கை நுழைக்க முடியாது அதனால்  நுங்கம்பாக்கம் போலீஸ் சும்மா இருந்து  விட்டது.  3 தினங்கள்  நகர்ந்து விட்டது.கொலையாளி  பிடிபட்டபாடு இல்லை .
தமிழ் நாட்டின்  ஒட்டு  மொத்த செய்தி தாள்கள் TV உட்பட அத்தனை  செய்தி தளங்களும் சுவாதி  கொலையை  ஒரு பெரிய  இஸ்சுவாக  எடுத்து  விட்டது.சென்னை நகரம்  பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற  குரல்கள் பலமாக ஒலித்தது.நாளாந்தம் செய்தி  தளங்களும் தொடராக செய்தி  கொடுத்துக்கொண்டே  வந்தது.

இப்போது சென்னை  நீதி மன்றம் தானாக சுவாதி  வழக்கை கையில் எடுத்தது சென்னை போலீஸ் கமிசனுக்கு கொலையாளியை  நீதி  மன்றத்தில் நிறுத்தும் படி நீதி மன்றம் உத்தரவு  பிறப்பிகின்றது .அத்துடன்  நீதி மன்றம் இந்தக்  கொலை  சம்பந்தமாக தனது கண்டனத்தை   சென்னை போலீஸ்க்கு  தெரிவிக்கின்றது .

அதனால் சுவாதி கொலை கேஸ் ரயில்வே  போலீஸ்சிடம் இருந்து நுங்கம்பாக்கம் போலீஸ்க்கு  மாற்றப்படுகின்றது.உடன் சென்னை  போலீஸ்  ஆணையர் ராஜேந்திரன் கேசை  நுங்கம்பாக்கம்  போலீஸ்  நிலையத்தில் இருந்து பொறுப்பெடுக்கின்றார்.நீதி மன்ற  அவமதிப்பு  ஒரு புறம்  மறுபுறம்  சவால் நிறைந்த  சாட்சிகள்  இல்லாத கொலைக்  கேஸ். அதனால்  10  தனிப்படை கொண்ட  விசேட போலீஸ்  குழுவை அமைக்கின்றார். 

Madras Police commissioner Mr. DK Rajendran IPS and Chennai Commissioner Additional Mr.Mohan sankar IPS and DSP Muthuvelupandi IPS with Team.
10 குழுவிலும் தேர்ச்சி பெற்ற சீனியர் அதிகாரிகள் இருந்தார்கள். 10 குழுவும்  10 கோணத்தில் தங்களது  விசாரணைகளை முடுக்கி விட்டார்கள் .முதல்  கட்ட விசாரணை கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் இருந்து  ஆரம்பமானது.
கொலை நடந்த இடைத்தை  சுற்றி அமைந்துள்ள  வீடுகளை  சுற்றி பொருத்தியுள்ள CCTV களை  ஆய்வு  செய்த போது ஒரு வாலிபன் தோழில் ஒரு  பேக் அணிந்து கொண்டு சற்று  வேகமாக  நடந்து செல்லும் காட்சி ஒன்று கிடைத்தது .அந்தக் காட்சியுடன்  அதே வாலிபன் ரயில்வே பாதையில் இருந்து இன்னொரு  பாதைக்கு பாய்ந்து  மாறுவதும் கையில் கத்தியுடன் நடந்து செல்லும் காட்சியும்  முதல்  தடயமாக கிடைத்தது.

ஆனால் கிடைத்த CCTV பதிவுகள்  தெளிவாக இல்லை  என்பதால் உடன் ஹைதராபாத் லேப் ஒன்றுக்கு  அனுப்பி  நவீன தொழில் நுட்பம் கொண்டு வீடியோ  பதிவுகளை நல்ல தெளிவாக எடுத்து சென்னை முழுவதும் ஊடகம் மற்றும் சகல விடுதிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டது.அதன் பின்பு விசாரணை சூடு பிடித்தது.கொலை நடந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் கன்டீன் நடத்திவரும் ஒருவர் இவன்தான்  கொலையாளி என்று பதிவை  ஊர்ஜிதமாக்கினார்.  
-தொடரும் -





Post Top Ad

Responsive Ads Here