நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். 70 மில்லியன் நிதி மோசடி தொடர்பில் விசாரணைக்காக அழைத்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை இன்று கோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரக்பி விளையாட்டு வளர்ச்சிக்காக கிரிஷ் குழுவிடம் பெற்றுக்கொண்ட நன்கொடையானது நாமலின் தனிப்பட்ட வங்கிக் கணக்கினூடாக சென்றுள்ளது. இது குறித்த விசாரணைகளுக்காகவே இன்று நாமல் ராஜபக்க்ஷ விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எம்;.எம்;.நிலாம்டீன் --

எம்;.எம்;.நிலாம்டீன்