இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி கொண்டு வர வலியுறுத்தி முக்கிய நகரங்களில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பினைஏற்படுத்தியுள்ளன.
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் உள்ளார். இவரது ஆட்சி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானின் கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர், மற்றும் ராவல்பிண்டி ஆகிய பெரு நகரங்களிலும், ராணுவ தளங்கள், ராணுவ கன்டோன்மென்ட்டுகள் உள்ள நகரங்களிலும் பரபரப்பு போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன. அதில் தற்போதைய பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ரகீல் ஷெரீப் படத்துடன் , ராணுவ ஆட்சியை கொண்டுவருங்கள் என வாசகம் இடம் பெற்றுள்ளது.
ரகீல் ஷெரீப் இந்தாண்டு நவம்பரில் ஓய்வு பெற உள்ளார். இந்த சூழ்நிலையில் சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் இது போன்ற போஸ்டர்களை ஒட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பாகிஸ்தானின் பல்வேறு அமைப்புகள், அரசியல் நோக்கர்கள், ஊழல் மிக்க நவாஸ் ஆட்சியை விட ராணுவ ஆட்சி எவ்வளவோ மேல்எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்


எம்;.எம்;.நிலாம்டீன்


எம்;.எம்;.நிலாம்டீன்