சுகாதர அமைச்சின் செயலாளராக வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்ஹ நியமனம்! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, December 10, 2024

சுகாதர அமைச்சின் செயலாளராக வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்ஹ நியமனம்!



சுகாதர அமைச்சின் செயலாளராக வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்ஹ நியமிக்கப்பட்டுள்ளார்!

கொவிட் தொற்றில் மரணித்தவர்களை பலவந்தமாக எரித்தபோது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக இருந்தது அனில் ஜாசிங்க. இந்த ஒற்றைத் தகவலை வைத்து அவரை இனவாதியாக சித்தரித்து முஸ்லிம் சமூகம் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறது.
கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அத்தனை வேலைகளையும் சுகாதார அமைச்சில் இருந்து பறித்தெடுக்கப்பட்டு, ராணுவத்தின் கீழ், மந்திரவாதிகளினதும் புவியியலாளர்களினது (geologist) வழிகாட்டலோடு நடைபெற்றது. அந்த நேரம் தான் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக இருந்த அனில் ஜாசிங்கஹ, "ஒன்றில் எரிக்கலாம், அல்லது அடக்கம் செய்யலாம்" என்று ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார். இதற்காகவே அவர் தண்டிக்கப்பட்டார். சுகாதர சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து தூக்கப்பட்டு, சுற்றாடல் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
வெறுமனே நான்கு வருடங்களுக்குள் அத்தனையையும் மறந்துவிட்டோம். நம்முடைய இந்த அதி அற்புதமான நினைவாற்றலை நம்பித்தான் மொத்த முழு அரசியலும் இயங்குகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here