வங்கதேசத்தின் "வால்" பறிபோனது.. கால் பகுதியை காப்பாற்ற கடும் போராட்டம் நடந்து வருகிறது, கைப்பற்றிய கிளர்ச்சிக் குழுவிற்கும் வங்க ராணுவத்திற்கும் கடும் சண்டை
வங்கதேச - மியான்மர் எல்லையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆர்கன் ராணுவம் (AA) என்ற கிளர்ச்சிக்குழு வங்கதேசத்தின் தெக்னாப் பிராந்தியத்தில் சில முக்கிய பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதற்றமான பகுதியாகவும் இந்த இடம் இருக்கும் நிலையில், ஆர்கன் ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
முகாமில் இருக்கும் ரோஹிங்கியா அகதிகள் அடித்து வங்கதேச நாட்டுக்குள் விரட்டபட்டுள்ளனர். இது வங்கதேசத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாக இது இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
எல்லைப்பகுதிகளில் வங்கதேச ராணுவத்திற்கும் ஆர்கன் கிளர்ச்சிக்குழுவிற்கும் இடையே பயங்கர துப்பாகிச்சண்டையில் 7 வங்கதேச ராணுவத்தினர் கொல்லப்பட்டனர், இதன் தொடர்ச்சியாகவே கிளர்ச்சிக்குழு அந்த இடத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இது வங்கதேச இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது. எனினும், இது தொடர்பாக வங்கதேச அரசு இதுவரை எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை.
ஏற்கனவே, மவுங்டாவ் உள்ளிட்ட சில இடங்களை ஆர்கன் ஆர்மி கைப்பற்றிய நிலையில் தற்போது மிகவும் ஆக்ரோஷமாக கிளர்ச்சிக்குழு செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் பைடனை தொடர்பு கொண்டால் அவர் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது என்று வருகிறது . ஒரே குழப்பம் ஆஸ்கார் விருது பெற்ற புது அதிபருக்கு
ஆர்கன் ஆர்மி கிளர்ச்சிக்குழுவின் எழுச்சிக்கு பின்னால் அண்டை நாடுகளின் ஆதரவும் இருப்பதாகவும் வங்கதேச நோக்கர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது. ஏற்கனவே, இந்தியா- வங்கதேசம் இடையேயான உறவு முன்பு போல சுமூகமாக இல்லை.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்கான் துறவி சின்மயி கிருஷ்ண தாஸ் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பெரும் நெருக்கடி: இந்த விவகாரத்தால் இரு தரப்பு உறவு மேலும் பாதித்தது. வங்கதேச அரசிடம் இந்தியா தனது கவலையையும் தெரிவித்தது. வங்கதேசம் பல ஆண்டுகளாக இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணி வரும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசல் வங்கதேசத்திற்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.
இத்தகைய சூழலில் தான் வங்கதேசத்தின் மிக முக்கியமான பகுதி ஒன்றை கிளர்ச்சிக்குழு கைப்பற்றியிருப்பது அந்நாட்டிற்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.
No comments:
Post a Comment