உற்பத்தி பொருளாதாரமே ஒரு நாட்டு பொருளாதாரத்தின் அடிப்படை ஆதாரமாக இருக்கும்
இன்றைக்கு 4 ஆசியா நாடுகள் உலகின் 66.9 % சதவீத அரிசி தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு முன்னேறி இருக்கின்றன.
அதாவது இந்தியா உலக அரிசி தேவையின் 36.8% த்தை பூர்த்தி செய்கின்றது
அதே போல வியட்நாம் மீன் சந்தையில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கின்றது
மலேசியா முட்டை ஏற்றுமதியில் 6 ஆவது இடத்திற்கு வளர்ந்து இருக்கின்றது
இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 10 ஆவது இடத்தில் இருக்கின்றது
அதே போல இந்தியா உலகின் 12.3% சதவீத வெங்காயம் தேவைகளை பூர்த்தி செய்கின்றது
தாய்லாந்து மட்டும் $ 33.1 மில்லியன் மதிப்பிலான பால் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது
கென்யா உலகின் 17.6% சதவீத தேயிலை தேவைகளை பூர்த்தி செய்கின்றது
எத்தியோப்பியா கோப்பி ஏற்றுமதியில் 8 ஆவது இடத்தில் இருக்கின்றது
இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ் ஆகியன தெங்கு பொருள் உற்பத்தியில் முதல் இரு இடங்களில் உள்ளன
இறப்பர் ஏற்றுமதியில் தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகியன முதல் மூன்று இடங்களை பகிர்ந்து கொள்ளுகின்றன
தைத்த ஆடைகள் ஏற்றுமதியில் பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் ஆகியன முறையே $ 38.73 பில்லியன்,$ 37.93 பில்லியன் ஆண்டு சந்தையை மதிப்பை கொண்டு உலகில் முன்னணியில் இருக்கின்றன
2000 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வறிய நாடுகளாகவிருந்த மேற்படி ஆசியா ஆப்பிரிக்கா நாடுகள் உற்பத்தி துறையில் கணிசமாக முன்னேறி வருவதை மேற்படி தரவுகள் உறுதி செய்கின்றன
அதாவது வியட்நாம், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகள் அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளுக்கு இணையாக உற்பத்தி துறையில் சாதித்து வருகின்றன
உணவு பொருட்கள் முதல் இலத்திரனியல் பொருள் உற்பத்தி என சகல துறைகளிலும் அசத்தி வருகின்றார்கள்
மறுபுறம் கடலால் சூழப்பட்ட இலங்கைத் தீவு நெத்தலி கருவாடு இறக்குமதிக்காக மட்டும் ஒரு வருடத்திற்கு ரூபா 995 கோடி செலவு செய்கிறது
இது போதாதென்று முட்டை, பால், மீன், வெங்காயம், உருளை கிழங்கு, பருப்பு, பூடு, சீனி என மிக அடிப்படை உணவு தேவைக்காக கூட இறக்குமதியில் தங்கி இருக்கின்றது
அதே சமயம் ஆசியா நாடுகளின் மொத்த ஏற்றுமதியில் இலங்கை ஏற்றுமதியின் பெறுமதி வெறுமனே 0.1 % ஆக உள்ளது
முழுமையான அரசியல் நிர்வாக கட்டமைப்பு மாற்றங்கள் இல்லாமல் இலங்கையில் எதுவுமே சாத்தியமாக போவதில்லை
குறிப்பாக சிங்கள பேரினவாத சிந்தாந்தங்களை சிதைக்காமல் முன்னேற வாய்ப்பு கிடைக்க போவதில்லை
No comments:
Post a Comment