மருத்துவ வரலாற்றில் மைல் கல்...! புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு..! https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/miracle-cancer-vanishes-for-every-patient-in-drug-trial-know-side-effects-dosages-and-more-717737?fbclid=IwAR11PKtWaGSYSRWk2_eqbEVjOuoHaSaCtM1f1QyuRkf3s5iPQrhcRu5wcD4 - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 11, 2022

மருத்துவ வரலாற்றில் மைல் கல்...! புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு..! https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/miracle-cancer-vanishes-for-every-patient-in-drug-trial-know-side-effects-dosages-and-more-717737?fbclid=IwAR11PKtWaGSYSRWk2_eqbEVjOuoHaSaCtM1f1QyuRkf3s5iPQrhcRu5wcD4

 மருத்துவ வரலாற்றில் புதிய மைல் கல்லாக புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. வாஷிங்டன் அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் ( dostarlimab) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்தை வைத்து சோதனை செய்யப்பட்ட எல்லோரும் 100 சதவிகிதம் கேன்சரில் இருந்து முற்றிலும் குணம் அடைந்து உள்ளனர். சோதனையில் மிகசிறிய அளிவிலானவர்களே பங்கேற்று உள்ளனர். . இவர்களுக்கு கீமோதெரபி மருத்துவ சிகிச்சைகளை வழங்காமல், டோஸ்டார்லிமாப் மருந்து கொடுத்தே நோயாளிகளை குணமடைய செய்துள்ளனர். மொத்தம் 18 குடல் புற்றுநோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து கொடுத்தபின் அவர்கள் முற்றிலும் அந்த நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர். எம்ஆர்ஐ, பிஇடி எனப்படும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி என்று அனைத்து சோதனையிலும் கேன்சர் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. Also Read - அனைத்து வித புற்றுநோய்க்கும் மருந்து வந்துவிட்டதாக கருத வேண்டாம் - மருத்துவ நிபுணர் விளக்கம் இந்த நோயாளிகள் சிலர் ஏற்கனவே வேறு விதமான சிகிச்சைகளை பெற்று, அதன் காரணமாக குணப்படுத்த முடியாத நிலையை அடைந்து, அதன்பின் இந்த டோஸ்டர்லிமாப் என்று மருந்து கொடுக்கப்பட்டு அவர்கள் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக அவர்களின் உடலில் எந்த விதமான ஆப்ரேஷனும் செய்யப்படவில்லை. பொதுவாக கேன்சர் நோய் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெரும் நபர்களுக்கு, சிகிச்சைக்கு பின் பக்க விளைவுகள் இருக்கும்.ஆனால் இவர்களுக்கு அந்த மாதிரியான பக்க விளைவுகள் எதுவும் இல்லை. அதேபோல் சிகிச்சை அளிக்கப்பட்டு 25 மாதங்கள் கழிந்தும் அவர்களுக்கு மீண்டும் கேன்சர் செல்கள் எதுவும் தோன்றவில்லை என்று டோஸ்டர்லிமாப் மருந்தை ஸ்பான்சர் செய்த கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு கட்டுரையை எழுதி உள்ள டாக்டர் ஆண்ட்ரியா செரிக், இந்த மருந்து சிறப்பாக செயல்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். கேன்சர் பாதிப்பு உள்ளவர்களுக்கு டோஸ்டர்லிமாப் மருந்து உடலில் மூன்று வாரங்களு ஒரு முறை செலுத்தப்படும். மொத்தம் 6 மாதங்கள் மருந்து செலுத்தப்படும். உடலில் இருக்கும் கேன்சர் செல்களை அடையாளப்படுத்த இது உதவும். கேன்சர் செல்கள் பொதுவாக உடலின் எதிர்ப்பு சக்தியில் இருந்து எஸ்கேப் ஆக மாஸ்க் போன்ற ஒரு படலத்தை கொண்டு மறைந்து இருக்கும். இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள் கேன்சர் செல்களை கண்டறிய முடியாது. ஆனால் இந்த மருந்து அந்த மாஸ்க்கை நீக்குவதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள், சுயமாக கேன்சர் செல்களை அழிக்க வழி செய்கிறது. Also Read - கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்த நாள் இன்று..! இதனால் இயற்கையாக கேன்சர் செல்கள் அழிகின்றன. பொதுவாக இது போன்ற சிகிச்சைகள் பக்க விளைவை ஏற்படுத்தும். ஆனால் டோஸ்டர்லிமாப் சிகிச்சை முறை அப்படி பக்க விளைவு எதையும் ஏற்படுத்தவில்லை. இதுதான் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. மோசமான நிலையை அடைந்தவர்களை கூட இந்த மருந்து குணமாக்கி உள்ளது. இந்திய மதிப்பில் இதன் சிகிச்சைக்கு இப்போதே ரூ. 9 லட்சம் வரை ஆகலாம் என்கிறார்கள். இந்த மருந்து மார்கெட்டிற்கு வரும் போது இதை விட கூடுதலாக இருக்கும். அதே சமயம் இந்த மருந்தை மற்ற மருத்துவர்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மற்றவர்கள் பொதுவாக இதை ஆராய்ச்சி செய்து உறுதி செய்ய வேண்டும். அதன்பின்பே இந்த மருந்து மார்கெட்டிற்கு வரும். அதற்கு சில மாதங்கள், வருடங்கள் ஆகலாம். அதேபோல் இந்த மருந்து எத்தனை காலத்தில் நோயாளிகளை குணமாக்கும் என்பதிலும் சில சந்தேகம் உள்ளதால் அதை பற்றி கூடுதல் ஆய்வுகளும் விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/miracle-cancer-vanishes-for-every-patient-in-drug-trial-know-side-effects-dosages-and-more-717737?fbclid=IwAR11PKtWaGSYSRWk2_eqbEVjOuoHaSaCtM1f1QyuRkf3s5iPQrhcRu5wcD4

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here