இலங்கையில் நீண்ட நேர மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, June 20, 2022

இலங்கையில் நீண்ட நேர மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

 இலங்கைக்குத் தேவையான நிலக்கரி கொள்வனவு உரிய முறையில் நடைபெறாது போனால் அடுத்த ஆண்டில் நீண்ட நேர மின்வெட்டை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க ஊடக சந்திப்பொன்றில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நிலக்கரி கையிருப்பு

தற்போதைக்கு கையிருப்பில் இருக்கும் நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாத நடுப்பகுதிக்குள்ளாக தீர்ந்து விடும்.

அதற்குப்பின்னரான பயன்பாட்டுக்கு நிலக்கரி கொள்வனவு செய்யப்பட வேண்டும்.

நீண்ட நேர மின்வெட்டு 

இல்லாது போனால் அடுத்த ஆண்டில் நீண்ட நேர மின்வெட்டினால் பொதுமக்கள் பெருமளவில் பாதிப்புகளை எதிர் கொள்ள நேரிடும்.

எதிர்வரும் செப்டெம்பர் தொடக்கம் அடுத்த ஆண்டின் ஏப்ரல் வரையான காலப்பகுதிக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும்.

அதனை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here