இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மலரும் மனிதநேயம்! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, June 27, 2022

இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மலரும் மனிதநேயம்!

 இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக எரிபொருள், எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக பல நாட்களாக நீண்ட வரிசையில் காத்திருந்து பெற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு காத்திருந்த பலருக்கும் எரிபொருளோ, எரிவாயுவோ கிடைக்காத சந்தர்ப்பங்களும் உண்டு.

சாதாரண முச்சக்கரவண்டி சாரதியினால் நாளாந்தம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்துவர்கள் பலர் உண்டு. அவ்வாறான சாரதி ஒருவர் நீண்ட வரிசையில் காத்திருந்தால் குடும்பத்தின் நிலை என்னவாகும்.

எரிபொருளில் மனிதாபிமானம்


இவ்வாறான நிலையில் எரிபொருள் நிரப்பு நிலைங்களில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உணவு உட்பட பசியாற்றும் பல்வேறு உணவுகளை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே இலவசமாக மண்ணெண்ணெய் வழங்கிய நபர், மதிய உணவும் வழங்கிய உரிமையாளர் தொடர்பான தகவல்கள் வெளியாகி இருந்தன.

பசியாறும் மக்கள்

தற்போது நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களுக்கு சிற்றூண்டிகளை வழங்கி அவர்களை மகிழ்வித்துள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் நாடு பூராகவுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்ளை லாபம் பெற்றுக்கொள்ள உரிமையாளர்கள் முயற்சிக்கும் காலகட்டத்தில் இவ்வாறானவர்களின் மனிதாபிமான செயற்பாடுகளும் பலரால் பாராட்டு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here