நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க கூடாது:நஸீர் அஹமட் - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 4, 2022

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க கூடாது:நஸீர் அஹமட்

 

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க கூடாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

“நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க எடுக்கப்படும் முயற்சிகள் ஆபத்தானது, இந்த பதவிக்கு வருபவர்களை பொறுத்தே, இதன் ஆழ அகலங்கள் அறியப்படுவதாக” முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான  நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“நிறைவேற்றதிகாரம் மக்களுக்கான உச்ச பாதுகாப்பளிக்கிறது. கடந்தகாலங்களில் அனுபவிக்க நேர்ந்தவைகள் சிலவற்றால், இப்பதவியை ஒழிக்க வேண்டுமென்று கோஷங்கள் எழுந்துள்ளன. ஆனால் இப்பதவியை ஒழிக்க கூடாதென்ற நிலைப்பாட்டிலேயே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. அக்கட்சியின் தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் தெளிவான நிலைப்பாடும் இதுவே” என குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையின் தேவைப்பாடு

“மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படும் போது தான் எல்லோருக்குமான எங்கள் ஜனாதிபதி என்ற உரிமையிருக்கும். இலங்கையில் உள்ள அத்தனை பிரஜைகளும் வாக்களிப்பதால் ஜனாதிபதிக்கும் ஒரு கடப்பாடு ஏற்படுகின்றது.

மாறாக நாடாளுமன்றம் பிரதமர் ஒருவரை தெரிவு செய்வதால் அவர், ஒரு மாவட்டத்துக்கு அல்லது பிரதேசத்துக்கு உரியவராகவே அர்த்தப்படும். அதுமட்டுமன்றி தேர்தலூடான தெரிவு வரும்போது தான் சமூகங்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஜனாதிபதிக்கு ஏற்படும்.

குறிப்பாக சிறுபான்மை மக்களின் தேவைப்பாடுகளையும் நிறைவேற்றுவதற்கு அவர் கடமைப்பட்டவராகிறார். ஏதாவதொரு அவசர தேவைகளை அடைந்துக்கொள்ள ஜனாதிபதியுடனுள்ள உறவுகள் அல்லது புரிந்துணர்வுகள் வழிவகுக்கும்.

இவ்வாறு பல விடயங்கள் கடந்தகாலங்களில் பெறப்பட்டுள்ளன. தனியொருவரின் மனநிலைகளுக்காக இந்த அதிகாரத்தையே முற்றாக ஒழிக்குமாறு கோருவது அர்த்தமற்ற சிந்தனையாகும்.” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here