அதிருப்தியடைந்துள்ளோம்! அதானி குழுமத்தின் அறிவிப்பு - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, June 14, 2022

அதிருப்தியடைந்துள்ளோம்! அதானி குழுமத்தின் அறிவிப்பு

 பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தின் பேரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட்டதாக, இலங்கை அதிகாரி ஒருவர் கூறியதை அடுத்து, இலங்கையின் எரிசக்தி திட்டம் தொடர்பான சர்ச்சை தொடர்பில் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதலீடு செய்வதில் தமது நோக்கம் மதிப்புமிக்க அண்டை நாடுகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதாகும் என்று அதானி குழுமம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் தற்போது எழுப்பப்பட்டுள்ள சர்ச்சைக் காரணமாக தாம் ஏமாற்றமடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அதானி குழுமம், இந்த பிரச்சினை ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தால் தீர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பதவி விலகல்

காற்றாலை மின் திட்டத்தை நேரடியாக அதானி குழுமத்திற்கு வழங்குமாறு பிரதமர் மோடி தனக்கு அழுத்தம் கொடுத்ததாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்ததாக நாடாளுமன்றக் குழு முன் கூறிய, இலங்கை இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ, மூன்று நாட்களுக்குள் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அவரின் கூற்றை ஜனாதிபதி ராஜபக்ச உறுதியாக மறுத்தமையை அடுத்தே, அவர் பதவி விலகியுள்ளார்.இலங்கை, மன்னார் மாவட்டத்தின் 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் தொடர்பான, பெர்டினாண்டோவின் கருத்து ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது.

அதானியின் இலங்கை பிரவேசம்

இதேவேளை 2021 ஆம் ஆண்டில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கும் இயக்குவதற்கும், இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் 700 மில்லியன் டொலர் உடன்படிக்கையில் ஏற்கனவே அதானி குழுமம், கையெழுத்திட்டுள்ளது.

7 மாதங்கள் முன்

அதானியின் சிறிலங்கா வருகை! அரசாங்கம் வெளியிட்ட தகவல்

 கோடீஸ்வர இந்திய வர்த்தகரான கௌதம் அதானி (Gautam Adani) குழுமத்தின் தலைவர் உள்ளிட்ட குழுவினரது வருகை உத்தியோகபூர்வமானது அல்ல என அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்ரண (Dr.Ramesh Pathrana) தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கௌதம் அதானி குழுமத்தின் வருகை தனிப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு அதானி நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

எனவே அவர்கள் அது தொடர்பில் விசாரித்தல் உள்ளிட்ட முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பிலும் அறிந்து கொள்வதற்கு இலங்கைக்கு வருகை தந்திருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்திலுள்ள தீவுப் பகுதிகளில் காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் குறித்து சீனாவின் பார்வை திரும்பிய நிலையில், மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின்திட்டம் பற்றி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் (Gotabaya Rajapaksa) அதானி குழுவினர் பேச்சு நடத்தியிருக்கின்றனர்.மன்னார் நடுக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது காற்றாலை திட்டத்தைப் பார்வையிட கோடீஸ்வர இந்திய வர்த்தகரான கௌதம் அதானியின் மகன் மற்றும் அதானி குழுமத்தின் நிறைவேற்று அதிகாரி உள்ளிட்டவர்கள் நேற்றைய தினம் மாலை மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here