பிரதமர் பதவியிலிருந்து ரணில் விரைவில் நீக்கப்படுவார்! ஹிருணிகா ஆரூடம்! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 19, 2022

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விரைவில் நீக்கப்படுவார்! ஹிருணிகா ஆரூடம்!



இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகிய பின்னர்  ஜி.எல். பீரிஸ் போன்ற ஒருவர் பிரதமராக வருவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் ஸ்திரமின்மையும், ராஜபக்சக்களின் பாதுகாப்பின்மையும் குறையும் வரை தான் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இம்முறை ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற போதிலும், எந்தவொரு வெளிநாட்டு அரச தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here