இம்மாத இறுதியுடன் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 25, 2022

இம்மாத இறுதியுடன் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்!


இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களுடம் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக அறிய வருகின்றது/

எரிபொருள் நெருக்கடி இலங்கையை உலகத்திலிருந்து விலக்கி வைப்பதாக தெரிவித்து குறித்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும், இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக விமானங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை காணப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மாத்திரமே விமானங்களுக்கான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மற்றும் விமான போக்குவரத்து நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஏற்கனவே சென்னைக்கு திரும்பியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எனினும் இந்த தகவல் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையம் உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல் காரணமாக விமானங்கள் இலங்கையில் தரையிறங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்கள் கூட தரையிறங்குவது தொடர்பில் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கையில் இருக்கக்கூடிய பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ நிதியியல் ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன் கடந்த மாதம் 9ஆம் திகதி ஊடறுப்பு நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு சூழலிலேயே தற்போது விமான நிலையங்கள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக சிங்கள ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இலங்கையில் அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சியடையும் அபாயம்! வெளியாகியுள்ள தகவல்!

அடுத்த மாதத்தில் அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சியடையும் அபாயத்தில் இருப்பதாக இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றம் அறிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் டானியா அபயசுந்தர இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இனி தங்களது தொழிலை நடத்த முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதுவரை காலமும் சேமிப்பில் தங்களுடைய தொழில்களை நடத்தி வந்தோம்.

எனினும்,தற்போது அதனை தொடர்வது மிகவும் கடினமாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சடிக்கப்படுவதாகவும், எனினும், தனியார் துறை ஊழியர்களுக்கு என்ன நடக்கும் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு பணம் அச்சடித்து ஊதியம் வழங்கினால், தங்களுக்கும் பணம் அச்சிட அச்சகம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.  

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here