நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது! பகிரங்கமாக அறிவித்தார் ரணில்! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 2, 2022

நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது! பகிரங்கமாக அறிவித்தார் ரணில்!

  


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கூற்றுப்படி, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டாலும், 21வது அரசியலமைப்பு சீர்திருத்தம்  உருவாக்கப்பட்டாலும், நாட்டில் எந்த  மாற்றமும் ஏற்படாது  என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று கொழும்பில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தின் போதே முன்னாள் பிரதமர் ரணில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வேலையை இழந்துள்ளனர். டொலர் தட்டுப்பாடு மற்றும் மோசமான நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக அரசாங்கம் ஸ்திரமற்ற நிலைக்குச் சென்றுள்ளதாகவும், இதனால் மக்களின் அன்றாட வாழ்வில் எரிவாயு, உணவு, எரிபொருள் மற்றும் மின்சாரம் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கூற்றுப்படி, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டாலும், 21 வது அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும், எந்த மாற்றமும் ஏற்படாது என குறிப்பிட்டுள்ளார்.  

20ஆவது திருத்தச் சட்டத்தில் தமக்கு விருப்பம் இல்லை எனவும், 21ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவது கடினம். 

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சரியான முடிவகளை எடுத்தால், 2023 ஆம் ஆண்டின் இறுதிக்கு முன்னர் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும்.

பழைய அரசியலில் இருந்து விடுப்பட்டு புதிய பயணத்திற்காக அனைவரும் இணைந்து போராட வேண்டும்.

 தற்போது நாட்டின் இளைஞர்களின் மாத்திரமல்லாது அனைவரது எதிர்காலமும் இல்லாமல் போயுள்ளது. இலங்கை தற்போது அராஜக நிலைமைக்குள் சென்றுள்ளதுடன் அனைத்து இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கோட்டாபய வீட்டுக்கு செல்ல வேண்டும், மகிந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற கோஷமே அனைத்து இடங்களிலும் கேட்கின்றது. அரசாங்கத்திற்குள் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளது.

அது கட்சியின் அணியினருக்கும் சகோதரர்களுக்கும் இடையிலான போராட்டம். 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணை இரத்தாகியுள்ளது எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here