- Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 19, 2022

 

பேரறிவாளனை விடுவித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அவருடன் முன்னாள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ரொபேர்ட்ஸ் பயஸ், சாந்தன் ஆகிய 6 பேருக்கும் பொருந்தும்.

இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ள இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தோமஸ் ஒரே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு வேறு தீர்ப்பை வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக கே.டி. தோமஸ் இருந்த காலப்பகுதியில் பேரறிவாளன் உள்ளிட்டோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்ட பின்னர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தோமஸூக்கு பேரறிவாளன் நன்றி தெரிவித்தார்.

இவ்வாறான நிலையிலேயே ஒரே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு வேறு தீர்ப்பை வழங்க முடியாது. இவர்களை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்.

அப்படி நடக்காததால் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தை நாடினார். அதன்படி நீதிமன்றம் சரியான தீர்ப்பளித்துள்ளது எனவும் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக கே.டி. தோமஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here