20க்கு கை தூக்க ஆசி வழங்கவில்லை என சத்தியமிட்டு ரிஷாத் MP சொல்ல முடியுமா? பாதி அமைச்சர் முஷர்ரப் MP ரிஷாத் பதியுத்தீனுக்கு பகிரங்க சவால் விடுத்தார்!
யாருக்கிட்ட ?
உங்க இரட்டை நிலைப்பாட்டை எங்கிட்ட காட்ட
வேண்டாம் ! பெசில் ராஜபக்சவின் வேண்டுகோளுக் கிணங்க அரசின் 20 ம் திருத்த மசோதாவுக்கு ஆதரவு கொடுக்க என்னை சொல்லவில்லை என்று சத்தியமிட்டு சொல்லுவாரா ரிசாத் MP ? சரியான போட்டி ! பகிரங்க சவால் ?
அந்தாள் சத்தியம் பண்ணுவார் ? அது அந்தாளுக்கு கைவந்த கலை!
ஆனாலும் முஷாரப் MP மகள் அல்லோலப்படும் இந்த நேரத்தில் நீங்கள் பாதி அமைச்சு பெற்றது மகா தப்பு ?
ரிசாத் MP தொண்டை கிழிய சும்மா சூடாக்காமல் .உங்க double camp விளையாட்டுகளை பொது இடங்களில் காட்டாமல் கிளி கூட்டை விட்டு பறந்து போயிட்டு என்று கம்மென்று இருந்தால் சோலி முடிந்தது.
அதை விட்டு கயவன் குயவன் அது இது என்று தம்பட்டம் அடிக்க வெளிக்கிட்டால் நாறப்போவது நீங்கதான் சாமியோ !
ஜெயிலுக்குள் இருந்து என்ன டீல் செய்தீர்கள் ,யாருடன் பேசினீர்கள் என்ன காரணத்தில் உங்களை சட்ட மா அதிபர் பிணை கொடுக்க பரிந்துரை செய்தார் ? மற்றும் அதன் பின்னணி அப்படி இப்படி என்று நிறைய சமாச்சாரம் வெளியில் வரும் ஜாக்ரதை அப்படீன்னு பச்சி சொல்லுது!
இதே சத்தியத்தை ஏறாவூர் நசீர் அஹமத் முன்வைக்கப் போகின்றார் ஹக்கீமிடம் ? இதைதான் சொல்லுவது பொல்லைக் கொடுத்து அடி வாங்குவது என்று .இல்லை வாயைக் கொடுத்து வம்பில மாட்டியதா ?
சரி ஏறாவூர் நசீர் அஹமத் என்ன சொல்லப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்போம்
M.M.Nilamdeen --
No comments:
Post a Comment