இலங்கையைப் போல காலம் கடந்திருக்கும்.பொருளாதாரம் முற்றிலுமாகச் சீரழிந்து ஒட்டுமொத்த மக்களும் வீதியில் இறங்கி போராடும் சூழல் உருவாகும். ! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, April 21, 2022

இலங்கையைப் போல காலம் கடந்திருக்கும்.பொருளாதாரம் முற்றிலுமாகச் சீரழிந்து ஒட்டுமொத்த மக்களும் வீதியில் இறங்கி போராடும் சூழல் உருவாகும். !

 


ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சமூக அமைதியும்,நல்லிணக்கமும் முக்கியம். திரு ரகுராம் ராஜன் சொல்வது போல் இந்தியாவில் தற்போது நடக்கும் சிறுபான்மையினரின் மீதான தொடர் தாக்குதல் மற்றும் வெறுப்பு அரசியல் உலக அளவில் இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அந்நிய முதலீடுகள் இந்தியாவிற்கு வருவதில்லை. உள்நாட்டில் சிறு,குறு நடுத்தர தொழில்கள் பணமதிப்பு நீக்கம்,ஜி.எஸ்.டி மற்றும் மோடியின் நண்பர்களான சில கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் ஆதரவான போக்கால் உருக்குலைந்து விட்டன.
வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி உருக்குலைத்த பொருளாதாரத்தை மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றிக்காட்டியது. இப்பொழுது மீண்டும் உருக்குலைந்துவிட்டது.
46 ஆண்டுகாலமாக இல்லாத வேலைவாய்ப்பின்மை,பெட்ரோல்,டீசல் மற்றும் விலைவாசி உயர்வு மக்களை வாட்டுகிறது. ஆனாலும் மோடி அரசு இஸ்லாமியர்களை வேட்டையாடுவதிலேயே குறியாக இருக்கிறது.
இழப்பு நம் எல்லோருக்கும் தான் என்று புரிகிற போது இலங்கையைப் போல காலம் கடந்திருக்கும்.பொருளாதாரம் முற்றிலுமாகச் சீரழிந்து ஒட்டுமொத்த மக்களும் வீதியில் இறங்கி போராடும் சூழல் உருவாகும். அதற்கு முன்பே நான் விழித்துக்கொள்வது நல்லது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here