நாம் தந்திருந்த மிக முக்கிய செய்தி இது!. எனது FB பக்கத்தில் பண வீக்கம் என்றால் என்ன ? அதன் தாக்கம் என்ன ? பண வீக்கம் எதனால் வருவுது என்ற அறிவு கொஞ்சம் தெரிந்தவர்கள் இல்லையே என்ற ஆதங்கம் ஒருபுறம் !
மறுபுறம் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவு தெரிந்தவர்கள் இல்லாது போனாலும் அவைகளை தெரிந்து கொள்ள வேண்டாமா ?
1. IMF என்பது பணம் அள்ளிக் கொடுக்கும் நிறுவனமல்ல.IMF என்பது இலங்கைக்கு உலக நாடுகள் கடன் கொடுக்கலாம் என்ற பரிந்துரை Recommendation மட்டுமே செய்யும் .
2. அந்த பரிந்துரை Recommendation கொடுப்பதற்கு முன்னர் நாட்டில் ஆட்சி ஸ்திரதன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.இப்போது ஆட்சி இருந்தாலும் அமைச்சரைவை இருக்கா இல்லையே ? அதனால் IMF மை இலங்கை குழு சந்திப்பதற்கு முன்னர் கோட்டா அமைச்சரவையை நிறுவ வேண்டும் .அப்படியானால் எதிர்வரும் 18 க்கு முன்னர் அமைச்சரவைய நிறுவ வேண்டும் ?
3.நாட்டில் ஸ்திரதன்மை இல்லாத ஆட்சிக்கு IMF பரிந்துரை கொடுக்காது ! நாட்டில் ஆட்சிக்கு எதிராக உள்நாடு ,வெளிநாட்டில் ஆர்ப்பாட்டம் நடந்து வரும் நாட்டுக்கு பரிந்துரை கொடுக்குமா ?
4.IMF இலங்கைக்கு பரிந்துரை கொடுக்க கூடாது என்று நாலா பக்கம் இருந்தும் IMF Washington Head office க்கு பல Email petition போயிருக்கும் .war crime கொண்ட நாட்டுக்கு பரிந்துரை கொடுக்க கூடாது என்று உலகம் முழுவதும் வாழும் புலம் பெயர் அமைப்புக்கள் அனுப்பியிருக்கும் ~
5. இது ஒருபுறமிருக்க IMF பரிந்துரை கொடுப்பதற்கு முன்னர் பல demands இலங்கைக்கு வைக்கும் !அதாவது கடந்த காலத்தில் இலங்கை செலவு செய்துள்ள சகல் செலவுகளையும் காட்டுமாறு கேட்கும் !
6. அதாவது முறை கேடான,பிழையான வெளிநாட்டுக் கடன் அதை எப்படி செலவு செய்தது , அதன் நன்மை என்ன? மக்கள் நலன் சார்ந்த திட்டங்களா ? பெற்ற கடன்கள் மூலமாக செய்துள்ள வேலைகள் ,செலவுகள் இப்படி ஏராளமான மூக்கு நுழைத்தல் அதிகரிக்கும் !
7. இதன் மூலமாக அரசின் கடந்த கால ஊழல்கள் ,முறைகேடான பணப்பரிமாற்றம் ,கொமிசன் போன்ற போதையால் கிளம்பும் .
8.அதாவது சீனாவிடம் இன்றுவரி பெற்றுள்ள வட்டிக் கடன் மற்றும் world Bank, Asian Development Bank போன்ற பல நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ள கடன்கள் ,அந்தக் கடன்கள் மூலமமாக செய்துள்ள திட்டங்களை பரிசோதிக்கும் . அதன் மூலமாக பல கொள்ளைகள் வெளிவரும் .
9. இலங்கை பற்றிய "கடன் மறுசீரமைப்பு" பற்றிய அறிக்கை வெளியானவுடன் சஜித் அணியை விட JVP கையில் எடுக்கும் .அதன் மூலமாக மகிந்தர் அரசு உட்பட கோட்டா அரசு வரை செய்துள்ள பண மோசடி வெளிவரும் .ஆக இந்த நிலையை JVP நன்றாக பயன் படுத்தி மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை உயர்த்தும் .அப்படியானால் நாம் ஏற்கனவே சொல்லியுள்ளது போன்று எதிர்வரும் பொது தேர்தலில் JVP ஆளும் கட்சி அல்லது ஆட்சிப் பங்காளி என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
10. மகிந்தர் ஆட்சியில் இருந்து இன்று வரை செய்துள்ள பண மோசடிகள் அம்பலமாகும் என்ற பயத்தில்தான் IMF உதவியை மஹிந்த கம்பனி நாடவில்லை .
இப்போது மாற்று வழியில்லை IMF மிடம் இலங்கை சரண்டர்.
ஆனாலும் IMF கோரும் நிபந்தனைகளுக்கு மகிந்தர் அரசு சம்மதிக்குமா ? அது ஒருமுரம் இருக்க IMF பரிந்துரை வழங்கும் வாய்புகள் கொண் கொஞ்சம் குறைவுதான் >
தமிழர் தரப்பு இந்த அறிய வாய்ப்புகளை நன்கு பயன் படுத்தினால் IMF ஊடாக நிறைய சாதிக்கலாம் >ஏன் சமஸ்டி கூட முன்வைக்கலாம்!
அமேரிக்கா ஊடாக தமிழர் தரப்புகள் நன்கு காய் நகர்த்தினால் IMF மூலம் சாதிக்கலாம் !.
இந்த நிலையில்தான் சீனா திடீரன்று கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவுவதற்கு தம்மால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.ஆக கடன் என்ற பிடிக்குள் இலங்கையை சிக்க வைக்க ஒரு நகர்வு !
பார்ப்போம்!
ஆய்வாளர் M.M.Nilamdeen B.co. M.A. Ecco-
No comments:
Post a Comment